அலைகள் பாண்டிய நிலா : 9 – வாசகர் கருத்துக்கள்…

கருத்து கடிதங்கள் வாசிப்பை தூண்டும் அல்லவா..

அலைகளில் நேற்று வெளியான சிந்தனை சிகரம் செல்வா பாண்டியர், அல்லது பாண்டிய நிலா 09, என்ற ஆக்கத்திற்கு வாசகர்களின் கருத்துக்கள் குவிந்தவண்ணமுள்ளன.

ஒரு படைப்பை அதி உயர் தொழில் நுட்பத்தில் எழுதுவது எப்படி.. உண்மையான தியாக உணர்வுடன் தேடலின் உச்சமாக எழுதுவது எப்படி..?

ஓர் ஆக்கத்திற்காக நாம் எவ்வளவு உழைக்க வேண்டியுள்ளது.. போன்ற எண்ணற்ற கேள்விக்கான பதிலை இந்த ஆக்கம் தெளிவுபடவே தருகிறது.

இது குறித்து சிங்கப்பூரில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் வந்துள்ள இரண்டு தகவல்களை முதலில் படித்துப் பாருங்கள்.

—————

பாண்டியநிலா: 09

பதுங்கு குழியில் இருந்து ஈழத்தமிழன் ஒருவன் தமிழில் பேசுவதை அது ஆங்கிலத்தில் மாற்றிப் பேசுகிறது.. வன்னியில் பேசிய எல்லா தமிழ் சொற்களும் ஆங்கில சொற்களாகி காற்றில் புற்றீசல்களாக பறக்கின்றன.. இரகசிய மில்லாத அம்மண உலகமாக மிளிர்கிறது விஞ்ஞானம்…

இதோடு சாட்டிலைட் உதவியுடன் geoinfomatics technology உதவியுடன், போராளிக்குழுக்களின் இடத்தை அக்கவேறு ஆணிவேராக படம்பிடித்துக் காட்டியதை, அண்ணன் செல்வா பாண்டியர் சிங்கை வந்தபோது geoinfomatics engineer தெளிவாக விளக்கினார்…

நீங்கள் இந்தக் கட்டுரையிலும் அப்படியே பதிவு செய்துள்ளீர்கள், இது மற்றவர்களுக்கு புரியுமா, தெரியுமா என்று நமக்குத் தெரியாது, ஆனால் நமக்கு ஆழமாக புரிகிறது….

அடுத்து, அன்பையும் தமிழையும் பிரிக்க இயலுமா, அதுபோல இயற்கையையும் தமிழ், தமிழர் பாண்டியர்களையும் அழிக்கமுடியுமா என்ற உலக இயங்கியலின் உண்மையை அப்படியே எழுதியுள்ளீர்கள், நான் குறிப்பிட்டு சொன்னதும்
“உலக இயக்கம் இருக்கும் வரை, நமக்கான தேவைஇருக்கிறது” என்று

இதே உண்மையைத்தான்தான், குறிப்பிட்டுச் சென்னேன்…

இது தற்செயல் நிகழ்வாக எப்படி இருக்கமுடியும்…

நீங்கள் ஆணித்தரமாக பதிவுசெய்துள்ளீர்கள் தோழர்,

மீண்டெழும் பாண்டியர்கள்…. என்பது என்ன வெறும் வார்த்தைகளா?, இல்லை அது உலக மானிட இயங்கியலின் புதிய பரிணாமம்.

முருகு எப்படி தனிநபர் அடையாளம் இல்லாமல், ஆக்கசக்திகளின் வெற்றியின் குறியீடோ, அதேபோல பாண்டியம் என்பதும் ஆக்கசக்திகளுக்கான குறியீடாக, ஆணித்தரமாக அடித்துச் சொல்லியுள்ளீர்கள்….

எனக்குத் தெரிந்து இயற்கையின் பிள்ளைகளான தமிழர்களின் ஆதிமுதல், இன்றுவரையான இயங்கியல் வரலாற்றை இந்த அளவிற்கு அறிந்து, புரிந்து தெளிந்தவர்கள் தமிழர் எழுத்தாளர்களில் யாரும் இருக்கிறார்களா என்று எனக்கு ஐயமே!…

பெரும்பாலும் இன்றைய காட்சிப்பிழைகளையே வரலாறாக என்னி தங்களை மேதைகளாகக் காட்டிக்கொள்ள
எத்தனிக்கிறார்கள்…

காட்சிப்பிழை, காட்சிப்பிழையே!…. அது வரலாறாகா, அதை வரலாறு சொல்லும்….

நாம் பாண்டித்துவத்தின் இயற்கையின் பிள்ளைகள், பிள்ளைகளுக்கு வயது வரம்பு உண்டு,

ஆனால் இயற்கைக்கு, பாண்டித்துவத்திற்கு வயது வரம்பு, காலவரையரை ஏது, அது இந்தப் பிரபஞ்சம் இயங்கும்வரை இருக்கவேண்டிய அங்கம்.

மீண்டும் பாண்டித்துவம் ஆளும்,

பாண்டியர்கள் தோற்பதில்லை….

முத்து பாண்டியர்.

—————————

எங்கே நமது சீடர்கள் தடுமாறி போய்விடுவார்களோ என்று விரல்பிடித்து அழைத்துச்செல்லவே தங்களை சந்திக்க வைத்துள்ளார்…
—————————-

எனக்கு பாண்டிய நிலா பாகம் :09 படித்ததிலிருந்து எந்த வேலையும் ஓடவில்லை…

——————————-

ரமேஷ் கண்ணா இரவுமுழுதும் அழுத கண்ணீரோடு காலையில் எழுந்தவுடன் என்னை அழைத்து நமது கனவுகளை நினைவுபடுத்தினார்…

——————————

படித்து முடித்த தருணம்.. திருவாசகம் படித்து உருகி நின்றது போல் உணர்வற்று கண்களின் நீர் ததும்ப நிற்கிறேன்… தங்கள் எழுதில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளின் உயிரோட்டத்தை அவதானிக்கிறேன்.. இவ்வுலக மாந்தர்களுக்கும் மட்டுமில்லாது இவ்வுலக எல்லா உயிர்களிலுக்காக உயிர் துறந்த எம் ஆருயிர் அண்ணன் மற்றும் சுரேஷ் மற்றும் பல்வேறு களப்போராளிகளின் பாதங்கள் பணிகின்றேன். உங்களை போன்ற உயர்ந்த சிந்தனை மற்றும் பெரும் மதிப்பிற்குரியவர்களை எம் கண்களுக்கு காண்பித்த காலத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

ரமேஸ் கண்ணா. ஆர்
——————————–

சொல்ல வார்த்தைகள் இல்லை மாஸ்டர்….

அந்த கல்கி சோழனின் புகழை பொன்னியின் செல்வனாக்கினான்…

நீங்களோ பாண்டியனின் அறத்தினை உலகை காக்கும் இயற்கையாய் பாண்டிய நிலாவாக்கி காவியம் படைத்து விட்டீர்கள்….

இக்காவியம் காலங்கள் தோறும் இக்காற்றிலே கலந்து நிற்கும்….

நன்றி கோடி சொன்னாலும் கைமாறாகாது .. ..

இயற்கை வெல்லும் ….

பாண்டியம் மீளும்…..

செல்லப்பாண்டியன் சென்னை

————————————

நீங்கள் படிப்பதற்காக இதோ இங்கே சொடுக்குங்கள்..

சிந்தனைச் சிகரம் செல்வா பாண்டியர் புதிய தொடர் அத்தியாயம் 09

Related posts

Leave a Comment