சீனாவுடனான உறவு இயல்பு நிலைக்கு திரும்புவதாக ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபே கூறியுள்ளார். இருநாடுகள் இடையேயான உறவில் உரசல் போக்கு உள்ள நிலையில், சீனாவின் பிரதமர் லீ கெக்கியாங் கடந்த மே மாதம் ஜப்பான் சென்று வந்தார். இதை தொடர்ந்து ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபே, அக்டோபரில் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக செய்தி இதழுக்கு பேட்டி அளித்த சின்ஸோ அபே, சீனாவுடனான உறவில் முன்னேற்றம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜப்பான் – சீனா இடையேயான உறவு இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும், எதிர்காலத்தில் சீன அதிபர் ஸீ ஸின்பிங் ஜப்பானுக்கு அழைக்கப்படுவார் என்றும் அபே குறிப்பிட்டுள்ளார்.