கடந்த 2010-ஆம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் வெளியான படம் ஜூலியாஸ் ஐஸ். ஐரோப்பிய நாடுகளில் வரவேற்பை பெற்றதுடன் இந்தியாவிலும் வரவேற்பு பெற்றது.
தன் சகோதரியின் சாவில் இருக்கும் மர்மத்தை கண்டறியும் முயற்சியில் ஜூலியா தன் பார்வையை இழக்கிறாள். அதன் பிறகு நடப்பதை படம் சஸ்பென்ஸ் த்ரில்லராக கூறுகிறது.
தற்போது தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. ஒளிப்பதிவாளர் கபீர் லால் தயாரித்து, இயக்குகிறார். இவர் கமல்ஹாசன் 4 வேடங்களில் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியதுடன் 100க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.
இதுபற்றி இயக்குனர் கூறும்போது, ‘சுவாரசியமான திரைக்கதை கொண்ட இப்படத்தை தமிழ் தெலுங்கு ரசிகர்களும் காண வேண்டும் என்ற எண்ணத்தில் ரீமேக் செய்கிறேன். பிறகு மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்படும்’ என்றார் கபீர் லால்.