பணம் கேட்டு குடும்பத்தினர் தொல்லை ஐஸ்வர்யா

isw

எனது அம்மாவுக்கும் குடும்பத்தினருக்கும் பணம்தான் முக்கியம் என்று நடிகை ஐஸ்வர்யா கூறினார்.

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஐஸ்வர்யா தத்தா, பாயும் புலி, ஆறாது சினம், சத்திரியன், சமீபத்தில் திரைக்கு வந்த ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இப்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அவர் தன்னிடம் பணம் கேட்டு குடும்பத்தினர் தொல்லை கொடுப்பதாக வருத்தப்பட்டார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:–

‘‘குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ் படங்களில் நடிப்பதற்காக சென்னை வந்தேன். அதன்பிறகு சொந்த ஊருக்கு செல்லவில்லை. எனது அம்மாவுக்கும் குடும்பத்தினருக்கும் பணம்தான் முக்கியம். என்மீது அவர்களுக்கு பாசம் கிடையாது. கொல்கத்தா செல்வதற்கு கையில் பணம் இருக்கிறது.

அங்கு போனாலும் குடும்பத்தினரிடம் இருந்து அன்பு கிடைக்காது. அவர்கள் பணத்தில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். எனது அம்மாவுக்கு கூட எனது நலனில் அக்கறை இல்லை. அவர்கள் யாரும் என்னை பார்க்க வருவதும் இல்லை. போனில் எனது பிரச்சினைகள் குறித்து பேசினால் கூட காது கொடுத்து கேட்பது இல்லை. எனக்கு வருமானம் எப்படி வரும் என்று கூட விசாரிப்பது இல்லை.

குடும்பத்தினருக்கு மாதம் தோறும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம்வரை அனுப்பி வைப்பேன். 10–ந் தேதிக்குள் பணம் அனுப்பா விட்டால் திட்டுவார்கள். அவர்களுக்கு பணம் கிடைத்தால் மட்டும் போதும்.’’

இவ்வாறு ஐஸ்வர்யா தத்தா உருக்கமாக பேசி சக நடிகர்–நடிகைகளை சோகப்படுத்தினார்.

Related posts

Leave a Comment


The reCAPTCHA verification period has expired. Please reload the page.