மியன்மாரில் ரொஹிங்கிய முஸ்லிம்களின் இனப் படுகொலை குறித்த அந்நாட்டின் செயல்பாடுகளைப் பற்றி ஐக்கிய நாட்டு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
வெறுப்புணர்ச்சி, தவறான தகவல்கள் முதலானவை அதன் சமூக ஊடக தளங்களில் பரவுவதைத் தடுக்கவே இந்த முடிவை எடுத்ததாக பேஸ்புக் கூறியது.
அவ்வகையில், மியன்மாரின் இராணுவத் தளபதி, உயர் ஜெனரல் மின் ஓங் லெங் உள்ளிட்ட 20 நபர்களின் சமூக ஊடகப் பக்கங்கள் அகற்றப்பட்டன.
12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அப்பக்கங்களைப் பார்வையிட்டு வந்ததாக பேஸ்புக் கூறியது. இராணுவ மற்றும் அரசின் முக்கிய புள்ளிகளுக்கு பேஸ்புக் தடை விதிப்பது இது முதல் முறை என்று பேஸ்புக் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக் தனது சமூகதளத்தில் வெறுப்புணர்வை கொண்ட உள்ளடக்கங்களை தடுப்பதில் நெருக்கடியை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.