திமுக தலைவர் பதவி ஏற்றவுடன் ஏற்புரை நிகழ்த்திய மு.க.ஸ்டாலின், இந்தியா முழுவதும் காவி நிறம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கூறினார்.
இதற்கு பதில் கொடுக்கும் விதமாக எச்.ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சவாலை ஏற்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராகவே உள்ளோம். களம் காண்போம் என குறிப்பிட்டுள்ளார்.