50 லட்சம் பேர் படம் பார்த்தால் படம் ஹிட்

sur

எந்த ஒரு விஷயம் பண்ணும்போதும், இன்னும் கொஞ்சம் நன்றாகப் பண்ணியிருக்கலாமோ என்று நினைத்தால், அதை அப்போதே சரிசெய்துவிட வேண்டும்; எங்கேயும் குறை வந்துவிடக் கூடாது என இயக்குநர் பாலா அடிக்கடி சொல்வார். அதனால், குறும்படங்கள் என்றாலும், அதில் சிறிய குறைகூட வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், உங்கள் வாழ்நாளையும் தாண்டி இதுதான் உங்களுக்கான முக்கியமான பதிவாக இருக்கப் போகிறது.

நிஜத்தில் நமக்கு நீதி கிடைக்கிறதோ, இல்லையோ… இதுபோன்ற குறும்படங்களின் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும். ‘கம்பளிப்பூச்சி’ குறும்படத்தில் காட்டப்பட்டுள்ளதைப்போல… அதைப் பார்த்து ஒருசில நபர்கள் மனம் திருந்தினாலே, அது நமக்குக் கிடைத்த வெற்றிதான். பெற்றோர், பள்ளிக்கூடம், இந்த சமூகம் சொல்லிக் கேட்காதவர்கள், சினிமா பார்த்து திருந்தினேன் என்று சொன்னால், அதுதான் சினிமாவின் பலம்.

இன்று 8 கோடி மக்களில் 50 லட்சம் பேர் படம் பார்த்தால், படம் ஹிட். 80 லட்சம் பேர் பார்த்தால் அது மெகா ஹிட். ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு, அந்தப் படம் பார்த்தவர்கள் மத்தியில் விவசாயிகள் குறித்த பார்வையை மாற்றியிருக்கும் என்பதுதான் சந்தோஷம்.

எது உங்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறதோ, அதைச் செய்யுங்கள். இந்த மார்க்கெட் வெளிப்படையானது. இதில் பாலும் விற்கலாம், கள்ளும் விற்கலாம். இரண்டுமே விலைபோகும். ஆனால், எதை விற்க வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்” என்றார்.

Related posts

Leave a Comment