ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கொழும்பில் நடத்த உள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக அமெரிக்க பிரஜைகள் பாதுகாப்பாக இருக்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கொழும்பில் நடத்த உள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக அமெரிக்க பிரஜைகள் பாதுகாப்பாக இருக்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
——————-
கொழும்பில் இன்று பொது எதிரணியினர் மேற்கொள்ளவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறைகளில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்துவதற்காக இறப்பர் குண்டுகளை பயன்படுத்தி முழங்காலின் கீழ் சுடுவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
அமைச்சரவையின் கூட்டத்தின் போது இது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் இந்த யோசனையை முன்வைத்தார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பேரணி கட்டுக்கடங்காததாக மாறினால் பொதுமக்களின் சொத்திற்கும் உயிர்களிற்கும் பாதிப்பு ஏற்பட்டால் பொலிஸா இறப்பர் குண்டுகளை பயன்படுத்தி முழங்காலின் கீழ் சுடுவதற்கு தயங்ககூடாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் இந்த தீர்மானம் குறித்து பாதுகாப்பு பேரவைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களிற்கு எதிராக காலிற்கு கீழ் சுடுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
———————
கொழும்பு 7 விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இலத்திற்கு உடனடியாக வருமாறு அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஹிந்த அணியின் ஆதரவாளர்களாக செயற்படும் கட்சித் தலைவர்களுக்கே இந்த அவசர அழைப்பு சற்றுமுன்னர் விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு மணியளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சித் தலைவர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
———————
அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆரம்பமாகலாம் என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை காலிமுகத்திடலை நோக்கி கொழும்பு புறக்கோட்டை வழியாக செல்ல உள்ள எதிர்ப்பு பேரணியில் இன்று மாலை 3 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் கொழும்பு புறக்கோட்டை அரச மர சந்திக்கு அருகில் பேரணியில் இணைந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிள்ளன.