கிலரி கிளிண்டன் தோற்றாரா தோற்கடிக்கப்பட்டாரா என்னும் சர்வதே அரசியல் விவகார இராஜதந்திர நூலும், புது மாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து என்ற நூலும் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக மாணவர்கள் மட்டத்தில் இந்த நூல்கள் வாசிக்கப்பட ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அரும்பெரும் பணியை தமிழர் நடுவம் தமிழகத்தில் இருந்து முன்னெடுக்கிறது. இது குறித்து தமிழர் நடுவத்தின் கமலேஷ் பாண்டியர் அனுப்பிய செய்தி..
இன்று திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக கல்லூரியில் நடந்த ஆசிரியர் தின கொண்டாட்ட நிகழ்வில் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் கி.செ துரை அவர்கள் எழுதிய கிலாரிகிளண்டன் தோற்றரா தோற்கடிக்கப்பட்டாரா ? என்ற தமிழின் முதல் சர்வதேச ராசதந்திர அரசியல் நூல் ,தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் வெளியீடு கல்லூரி நூலகத்திற்கு ஆங்கில துறை மாணவிகளால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது…
போரின் இழப்புகளை தாண்டி தமிழினம் வர பேராற்றலாக தன்னம்பிக்கையை விதைத்த புதுமாத்தாளன் சோகங்களும் அருமருந்தும் கி.செ துரை அவர்கள் எழுதிய நூல் மாணவர்களால் நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இன்னும் ஆயிரம் ஆயிரம் மாணவர்களை சென்றடைய வேண்டும்…
கமலேஷ் பாண்டியர்
தமிழர் நடுவம்