டென்மார்க்கில் 100 வது பிறந்த நாளை வெற்றிகரமாக தொடுவோர் தொகை கடந்த பத்து ஆண்டு காலத்தில் 30 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் வாழ்வோரின் சராசரி ஆயுட்காலத்தை உயர்த்த முடியவில்லை என்றாலும் 100 வயதுவரை வாழும் ஒரு சில புறடை மனிதர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடிவதாகவும் புள்ளி விபரம் தகவல் தருகிறது.
சாதாரண மக்களில் பலர் மதுபானம், சிகரட், போதை வஸ்த்து, தேகப்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் நாட்டின் சராசரி ஆயுட்காலத்தை உயர்த்துவதில் யாதொரு பங்களிப்பையும் வழங்காது வாழ்ந்து வருவதாக முன்னைய செய்திகள் கூறியிருந்தன.
உதாரணம் : புகைத்தலால் புற்றுநோயில் மடிவோர் தொகை அதிகரிப்பதைக் கூறலாம்.
இப்படி பல காரணங்கள் மக்கள் ஆயுட்காலத்தை அதிகரிப்பதில் தடையாக இருந்தாலும் 100 வயது வாழும் மக்களின் தொகை மட்டும் கூடுகிறது. தற்போது டென்மார்க்கில் 1079 பேர் 100 வது வயதை தொட்டுள்ளனர்.
1906 – 1915 காலப்பகுதியில் டென்மார்க் தெற்கு புய்ன் பகுதியில் இருக்கும் அரோய், ரோசிங்க, லங்கலாண்ட், வெஸ்ற் லோலன்ட் போன்ற இடங்களில் வாழ்வோர் 100 வயது வரை வாழ்வது அதிகமாக இருக்கிறது.
மற்றைய பகுதிகளுடன் ஒப்பிட்டால் இவர்கள் 37 வீதம் அதிகமாக 100 வயதை தொடுகிறார்கள். இதற்கான காரணம் தெரியவில்லை.
அலைகள் 07.09.2018 வெள்ளி