சென்னை: கண்டதும் காதலில் விழுந்து முத்தம் கொடுத்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் த்ரிஷா.
த்ரிஷா துபாயில் உள்ள ரிசார்ட்டில் டால்பினை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார்.
கண்டதும் காதல் என்று தலைப்பிட்டு அவர் சில புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது அந்த புகைப்படங்களால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
த்ரிஷா த்ரிஷாவின் புகைப்படங்களை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
பீட்டா விளம்பர தூதுவராக இருந்து கொண்டு டால்பினை கொடுமைப்படுத்தியுள்ளார் த்ரிஷா என்று அவர்கள் கொந்தளித்துள்ளனர்.
டால்பின் புகைப்படங்களை போட்டால் ரசிகர்கள் க்யூட், அழகு என்பார்கள் என்று எதிர்பார்த்தால் இப்படி பிரச்சனையாகிவிட்டதே?
விளையாட்டு டால்பின்களை நீச்சல் குளத்தில் அடைத்து வைத்து மனிதர்களுடன் விளையாடச் செய்வது அவைகளை டார்ச்சர் செய்வதாகும்.
பணக்காரர்களின் விளையாட்டுக்கு டால்பின்கள் தான் கிடைத்ததா?. த்ரிஷா, நீங்கள் எல்லாம் பீட்டா தூதுவர் என்று வெளியே சொல்லாதீர்கள்.
பணக்காரர்களை மகிழ்விப்பது டால்பினின் வேலை அல்ல என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கொந்தளித்துள்ளனர்.
பயம் ஹைதராபாத்தில் உள்ள கேரிங் ஹேண்ட்ஸ் ஃபார் அனிமல்ஸ் ஆர்வலர் பத்மஜா கூறியதாவது, மனிதர்களுடன் விளையாடுவது டால்பின்களின் வேலை இல்லை. விளையாட அவை ஒன்றும் பொம்மை அல்ல.
டால்பின்களை சித்ரவதை செய்து தான் தாங்கள் சொல்லியபடி எல்லாம் கேட்க வைக்கிறார்கள்.
டால்பின்களை மனிதர்களுடன் விளையாடச் சொல்வது கொடுமை. அவை பயத்தால் மனிதர்களுடன் விளையாடுகிறதே தவிர அன்பால் அல்ல என்றார்.
பூங்காக்கள் டபுள்யூ.டபுள்யூ.எஃப் இந்தியா ஆர்வலரான பரிதா தம்பல் கூறுகையில், கடலில் வாழும் உயிரின் டால்பின்.
பொழுதுபோக்கு பூங்காக்களில் அவைகளுக்கு எப்படி இயற்கையான சூழல் அமையும்? டால்பின்களுக்கு எதற்காக மனிதர்களின் பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்?.
அவற்றை அவற்றின் மனம் போன்று வாழ விட வேண்டும் என்றார்.