தியாகி திலீபன் நினைவு நாள் இப்போது இலங்கையின் பல பகுதிகளிலும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டு வருகிறது.
இன்று யாழ். நல்லூரில் பெருந்திரளான மக்கள் கூடி திலீபன் அஞ்சலியை நடத்தினார்கள்.
இது போல வல்வை உட்பட இலங்கையின் இதர பகுதிகளிலும் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு திலீபன் நினைவு நாள் கூடுதலான சுதந்திரத்தோடு நடைபெற்றதை காணமுடிகிறது.
வல்வை ஆதிகோயிலடியில் நடைபெற்ற திலீபன் நினைவு நாளில் பங்கேற்றவர்களிடம் இது குறித்து விசாரித்தபோது, அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாது. இது குறித்து இராணுவத்தின் நிலைப்பாடும் எமக்குத் தெரியாது ஆனால் நினைவேந்தல் நடக்கிறது என்று ஒருவர் நம்மிடம் கூறினார்.
இன்று நல்லூர் திலீபன் நாள் மிகவும் வித்தியாசமான கோணத்தில் இடம் பெற்றது.
இது குறித்து இலங்கை அரசு தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது.
இறந்தோரை அஞ்சலிக்கும் உரிமை அப்பகுதி மக்களுக்கு இருக்கிறதென முன்னரே தலைவர்களால் கூறப்பட்டு வந்தாலும் அது தடை செய்யப்பட்டே வந்தது.
இப்போது தளர்வான போக்கை அவதானிக்க முடிகிறது. ஐ.நா மனித உரிமை கவுண்சில் கூட்டம் நடைபெறும் வேளை தளர்வுகள் இருக்குமா தெரியவில்லை.
மறுபுறம் இது உண்மையான சுதந்திரமா இல்லை புயலுக்கு முந்திய அமைதியா என்பது தெரியவில்லை என்கிறார்கள்.
அதேவேளை தியாகி திலீபன் நினைவுநாள் வழமைபோல புலம் பெயர் நாடுகளில் மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
அலைகள் 26.09.2018 புதன்