மணிரத்தினம் என்பவர் உண்மையில் ஒரு சரியான இயக்குனர் அல்ல பெரு நஷ்டங்களை ஏற்படுத்தும் ஒருவர் என்று முன்னர் அவரை வைத்து படம் எடுத்த ஒரு தயாரிப்பாளர் சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது.
செக்கச் சிவந்த வானத்தில் அவர் இழைத்த தவறுளபை; பார்த்தல் அவர் சொன்னது சரிபோலவே தெரிகிறது. அப்படத்தில் அவர் இழைத்த பத்து மடைத்தனங்கள்.
01. பிரகாஷ்ராஜின் தாதா பதவியை கைப்பற்ற அவருடைய பிள்ளைகள் மோதி மடிகிறார்கள் என்பதே கதை. ஆனால் அப்படி முழு குடும்பமுமே அழியுமளவுக்கு பிள்ளையார் கோயிலுக்கு போகும் சாதாரண பிரகாஷ்ராஜின் பவர் என்ன.. என்பதை படத்தில் காட்ட தவறிவிட்டார் மணிரத்தினம். இதனால் கதையில் அவர் எடுத்த எல்லா முயற்சியும் நாசமாகிவிடுகின்றன. படத்தின் ஒவ்வொரு செயலும் அர்த்தமற்று போகின்றன.
02. தந்தையை மகன் கொல்வதற்கும் சகோதரங்கள் ஆளையாள் கொல்வதற்கும் உரிய காரணங்கள் திரைக்கதையில் பலமாக இல்லை இதற்கு மணி ரத்தினமே பொறுப்பு. நடிகர்களுக்கு காட்சி கொடுக்கப்போய் உயிர் நாடியை கோட்டை விட்டுவிட்டார்.
03. திரையில் தமிழ் உரையாடல்களை சிங்கள தமிழ் போல வெட்டி வெட்டி பேசுவது மணிரத்தினம் ஸ்டைல் என்று யாரோ உருவேற்றிவிட, இன்றுவரை மணிரத்தினம் இறங்கியபாடில்லை. பாவம் மனிதன் அது சரியென நினைக்கிறார்.
04. இவருடைய தமிழே படத்தின் கதையை இயல்பாக சொல்ல முடியாமல் கடிவாளம் போடுகிறது. இந்த கொன்னை தமிழை ஒரு நடிகர் பேசினால் காரியமில்லை. எல்லோரையுமே தனது தப்பான தமிழை பேச வைத்து இயல்பாக நடிக்க முடியாத அவலத்தை நடிகர்களுக்கு ஏற்படுத்தியதும் மணிரத்தினத்தின் குற்றமே.
05. ஜோதிகாவை அளவுக்கு மீறி தொட்டு நடித்தால் வீட்டில் இருந்து போன் வரும் என்பது போல அவரை அரவிந்தசாமி தொடாமல் தவிர்த்து, அதற்கு பதிலாக அவருக்கு ஒரு வைப்பாட்டி போட்டுள்ளார். இப்படி சிவகுமார் குடும்பத்து சீத்துவக்கேட்டை சீர்செய்ய முயன்று, கடைசியில் அரவித்தசாமிக்கு இரண்டு மனைவிகளை வழங்கி இருதார முறையை ஏற்பது சரியென்று கூறுகிறார்.
06. பிரகாஷ்ராஜ் மீது சுட வருபவன் கார் சாரதியை சுடுவது செயற்கையானது. கதைக்காக செய்யப்படுவது தெரிகிறது. இதுபோல சிம்பு கடைசியில் துப்பாக்கியுடன் பிராக்கு பார்த்தபடி நின்று சூடு வேண்டுவது அப்பட்டமாக தெரிகிறது. இப்படி ஒன்றல்ல இரண்டல்ல ஏராளம் காட்சிகள் முன்னரே நடக்கப்போவதை காட்டிவிடுகின்றன.
07. தானே பிரதான குற்றவாளி என்பதை வில்லன் இரண்டு இடங்களில் 15 நிமிட இடைவெளியில் சொல்வது பழைய 70 களின் நாடகங்களில் வருவதைப்போல இருக்கிறது.
08. பேத்தை வண்டி குலுங்க குலுங்க ஓடும் சிம்பு தாய்லாந்துகாரனை வெல்வது சிரிப்புக்கிடமானது. தமிழ் நாட்டு நாயகன் என்றால் வெற்றி அவனுக்கே என்று முடிவு செய்வது விஜயகாந்த் காலத்து பழைய கூத்து, அது இப்போதும் தேவையா.
09. தேவையற்ற கவர்ச்சிகள் கதைக்கு எந்த இடத்திலும் பொருந்தவில்லை. அதற்குள் இலங்கை தமிழ் வேறு.
10. சகோதர அழிவுக்கு வழிகாட்டும் சமுதாயப் பொறுப்பற்ற இயக்குநராகவும் மணிரத்தினம் நிற்கிறார். பாவம் ஏ.ஆர். ரஹ்மான் இவரோடு சேர்ந்ததால் அவரும் காப்பியடிக்க தொடங்கிவிட்டார்.
அலைகள் 30.09.2018