ஐரோப்பிய நாடுகளில் அடுத்த கட்ட படப்பிடிப்பு

ரஜினிகாந்த், ‘காலா’ படத்தை முடித்த பிறகு இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில், புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இதுவரை டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. முக்கிய காட்சிகள் சென்னை பின்னி மில் அரங்கில் படமானது. ரஜினிகாந்த்–விஜய் சேதுபதி நடித்த சண்டை காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது. அத்துடன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பை லடாக் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்க டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் இப்போது நடைபெறுகின்றன.

திறனற்ற பாகிஸ்தான் 30 கோடி டாலர் ரத்து

தீவிரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தானுக்கான 30 கோடி அமெரிக்க டாலர் உதவி தொகையை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த வருடம் ஆகஸ்டில் டிரம்ப் புதிய தெற்காசிய கொள்கையை வெளியிட்டார். தீவிரவாத குழுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கும்படியும் கேட்டு கொண்டார். இந்த நிலையில், இந்த வருடம் ஜனவரியில் பாகிஸ்தான் நாட்டுக்கான பாதுகாப்பு உதவிக்கு வழங்க இருந்த 115 கோடி அமெரிக்க டாலர் உதவி தொகை ரத்து செய்யப்பட்டது. இதற்கு ஆப்கானிஸ்தான் தலீபான் குழுக்கள் மற்றும் ஹக்கானி நெட்வொர்க் ஆகிய தீவிரவாத குழுக்களுக்கு புகலிடம் அளித்ததுடன் அவர்களுக்கு எதிராக எந்தவிட நடவடிக்கையையும் எடுக்க முடியாத நிலையில் பாகிஸ்தான் உள்ளது என காரணம் கூறப்பட்டது. இதனால் அமெரிக்கா…

50 லட்சம் பேர் படம் பார்த்தால் படம் ஹிட்

எந்த ஒரு விஷயம் பண்ணும்போதும், இன்னும் கொஞ்சம் நன்றாகப் பண்ணியிருக்கலாமோ என்று நினைத்தால், அதை அப்போதே சரிசெய்துவிட வேண்டும்; எங்கேயும் குறை வந்துவிடக் கூடாது என இயக்குநர் பாலா அடிக்கடி சொல்வார். அதனால், குறும்படங்கள் என்றாலும், அதில் சிறிய குறைகூட வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், உங்கள் வாழ்நாளையும் தாண்டி இதுதான் உங்களுக்கான முக்கியமான பதிவாக இருக்கப் போகிறது. நிஜத்தில் நமக்கு நீதி கிடைக்கிறதோ, இல்லையோ… இதுபோன்ற குறும்படங்களின் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும். ‘கம்பளிப்பூச்சி’ குறும்படத்தில் காட்டப்பட்டுள்ளதைப்போல… அதைப் பார்த்து ஒருசில நபர்கள் மனம் திருந்தினாலே, அது நமக்குக் கிடைத்த வெற்றிதான். பெற்றோர், பள்ளிக்கூடம், இந்த சமூகம் சொல்லிக் கேட்காதவர்கள், சினிமா பார்த்து திருந்தினேன் என்று சொன்னால், அதுதான் சினிமாவின் பலம். இன்று 8 கோடி மக்களில் 50 லட்சம் பேர் படம் பார்த்தால், படம்…