மத்தியதரைக் கடலை நோக்கி விரையும் ரஷ்ய போர் கப்பல்கள்

ரஷ்யா மத்தியதரைக் கடலில் ஒரு டஜன் போர் கப்பல்களை குவித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டு சிரிய யுத்தத்தில் ரஷ்யா தலையிட்டது தொடக்கம் ரஷ்யாவின் மிகப்பெரிய கடற்படை குவிப்பாக இது இருப்பதாக ரஷ்ய பத்திரிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவின் கூட்டாளியான சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் நாட்டில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி பகுதியான வடக்கு இத்லிப் மாகாணத்தின் மீது தாக்குதல் தொடுக்க தயாராகி வருவதாக செய்தி வெளியாகி இருக்கும் நிலையிலேயே ரஷ்யாவின் படை குவிப்பு இடம்பெறுகிறது. மறுபுறம் சிரிய அரச படை மீது தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு தயாராகும் வகையில் மத்திய கிழக்கில், அமெரிக்கா படைகளை கட்டியெழுப்பி வருவதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. ரஷ்யாவின் அட்மிரல் க்ரிகொரோவிச் மற்றும் அட்மிரல் எஸ்ஸன் போர் கப்பல்கள் துருக்கியின் பொபொரஸ் நீரிணை ஊடாக கடந்த செவ்வாய்க்கிழமை…

இலங்கை – மியன்மார் உடன்படிக்கை மீள செயற்படுத்தப்படும்

இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான இணைந்த வர்த்தக உடன்படிக்கையை மீண்டும் செயற்படுத்தி இருநாடுகளுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளை புதியதோர் பாதையில் முன்னெடுக்க இருநாடுகளினதும் அரச தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர். வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியம் எனப்படும் ‘பிம்ஸ்டெக்’ (BIMSTEC) உச்சி மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேபாளத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் மியன்மார் நாட்டின் ஜனாதிபதி வின் மைன்ட் (Win Myint) இற்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (30) முற்பகல் நேபாளத்தின் கத்மண்டு நகரில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே மேற்படி விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டது. இலங்கைக்கும் மியன்மாருக்குமிடையில் வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக 1999 ஆம் ஆண்டு இந்த வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட மியன்மார் – இலங்கை இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இதன்போது தலைவர்கள் விசேட கவனம் செலுத்தினர்.…

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற ஈரான் முடிவு

மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈரான், அணு ஆயுதங்களை தயாரித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன், ஐ.நா சபையில் முறைப்பாடுகள் கூறிய அமெரிக்கா, அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கச் செய்தது. ஆனால், ஈரான், தங்களிடம் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் இருந்தபோதிலும், அணு ஆயுதங்கள் எதையும் தயாரிக்கவில்லை என்றது. இருப்பினும், உலக நாடுகள் (அமெரிக்கா, பிரிட்டைன், சீனா, பிரான்ஸ், ரஷியா, ஜெர்மனி) விதித்த பொருளாதார தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டதால், அணு ஆயுதப் பரவல் தவிர்ப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாக, ஈரான் அறிவித்தது. இதையடுத்து, ஈரானுக்கும், வளர்ச்சி அடைந்த ஆறு நாடுகளுக்கும் இடையே கடந்த 14-7-2015 அன்று அணு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஈரானில் யுரேனியத்தை செறியூட்டி, அணு குண்டாக மாற்ற பயன்படும் ‘சென்ட்ரிபியூஸ்’ எண்ணிக்கை மூன்றில்…

ஆறுமுகன் தொண்டமான் பதவி விலகினார்

இலங்கை தொழிலளார் காங்கிரஸின் பொது செயலாளர் பதவியில் இருந்து ஆறுமுகன் தொண்டமான் பதவி விலகியுள்ளார். இலங்கை தொழிலளார் காங்கிரஸின் நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்றுகூடல் கொழும்பில் உள்ள இ.தொ.கா தலைமையகத்தில் இன்று (30) காலை இடம்பெற்றது. காங்கிரஸின் பொது செயலாளரும், தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கூடிய தேசிய சபை மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களால் இந்த நிர்வாக மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் இதுவரை காலமும் காங்கிரஸின் பொது செயலாளர் மற்றும் தலைவராக பதவி வகித்த ஆறுமுகன் தொண்டமான், இன்று முதல் தலைவராக மட்டும் செயற்படவுள்ளார். அத்தோடு, புதிய பொது செயலாளராக அனுஷியா சிவராஜாவும், பிரதி பொது செயலாளராக ஜீவன் தொண்டமான் மற்றும் உப தலைவராக பதுளை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிங்கள மக்களை குடியேற்றுவதற்கு நீண்டகாலமாக திட்டம்

மகாவலி திட்டம் ஊடாக தமிழர்களின் பிரதேசங்களில் சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்றுவதற்கு அரசு நீண்டகாலமாகவே திட்டமிட்டு இருந்து காமினி திஸநாயக்க அமைச்சராக இருந்தபோது வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களில் அதன் ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராச தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்த கோரி இன்று (28) காலை முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் பங்கு பற்றி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், இந்த பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்த விடயம் அல்ல அமைச்சர் காமினி திஸநாயக்காவின் திட்டப்படி நாற்பதாயிரம் சிங்கள குடும்பங்களை முல்லைத்தீவில் குடியேற்றுவதுதான் அந்த ஆவணம் எங்களிடம் இருக்கின்றது ஒரு இலட்சம் ரூபா ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுக்கும்…