கருணாநிதியை விட அதிர்ஷ்டம் செய்தவர் நீங்கள்

திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலினை வாழ்த்திய பொருளாளர் துரைமுருகன் பழைய நினைவுகளை அசைபோட்டார். 1968-ல் கருணாநிதி தலைவரானது முதல் தற்போதைய பிரச்சினைகள் வரை பேசினார். அவரது பேச்சு விபரம்: “60-ம் ஆண்டுகளில் அரைக்கால் சட்டை, குட்டி பனியன் போட்டுக்கொண்டு நானும் முரசொலி செல்வமும் இருந்தபோது பயந்து பயந்து அந்தப்பக்கம் ஓடுவீர்கள். ஆனால் என் கண் முன்னால் வளர்ந்து, எனது தோளுக்கு மேல் வளர்ந்து தோழனாகி, என தலைக்குமேல் வளர்ந்து எனக்கு தலைவராகவும் ஆகிவிட்டீர்கள். மகிழ்ச்சி. எனக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சி. 1962-லிருந்து மேடை மேடையாகப் பேசி இன்னும் பேசிக்கொண்டிருக்கும் நான், இன்று பேச முடியவில்லை. பேச்சு வரவில்லை. மாபெரும் இயக்கமான திமுகவில் பொருளாளர் பதவிக்கு என்னை உயர்த்தி வைத்துள்ளீர்கள். நான் அந்தப் பதவிக்குரிய தகுதியை முயன்று பெற்றுக்கொள்வேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். திமுக மிகப்பெரிய இயக்கம், இன்று…

தர்மா தர்மகுல சிங்கம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை

டென்மார்க் வாழ். தர்மா தர்மகுலசிங்கம் தொடர்பாக கடந்த சில வாரங்களாக பல செய்திகள் வெளியிடப்பட்டு வந்துள்ளன. இவை ஆதரமற்ற செய்திகள், பொய்யானவை என்று கூறும் தர்மா இது தொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அறிக்கை வருமாறு..: தற்பொழுது டென்மார்க்கில் வசிக்கும் தர்மா தர்மகுலசிங்கம் ஆகிய நான், யாழ்ப்பாணம், கரவெட்டி. கன்பொல்லைக் கிராமத்தில், உள்ள புத்த மகாசங்கத்திற்குச் சொந்தமான காணியில், புத்த விகாரை ஒன்றைக் கட்ட முனைந்துள்ளதாக விஷமிகளால் பொய்யான பிரச்சாரம் ஒன்று ஊடகங்களூடாகப் பரப்பப் படுகின்றது . இச் செய்தியில் எந்த உண்மையும் கிடையாது . இது எனது பெயரை களங்கப் படுத்துவதற்கான வதந்தியாகும் . இதை உங்கள் பொது ஊடகத்தில் வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் .