தமிழில் ரீமேக் ஆகும் ஸ்பானிஷ் படம்

கடந்த 2010-ஆம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் வெளியான படம் ஜூலியாஸ் ஐஸ். ஐரோப்பிய நாடுகளில் வரவேற்பை பெற்றதுடன் இந்தியாவிலும் வரவேற்பு பெற்றது. தன் சகோதரியின் சாவில் இருக்கும் மர்மத்தை கண்டறியும் முயற்சியில் ஜூலியா தன் பார்வையை இழக்கிறாள். அதன் பிறகு நடப்பதை படம் சஸ்பென்ஸ் த்ரில்லராக கூறுகிறது. தற்போது தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. ஒளிப்பதிவாளர் கபீர் லால் தயாரித்து, இயக்குகிறார். இவர் கமல்ஹாசன் 4 வேடங்களில் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியதுடன் 100க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். இதுபற்றி இயக்குனர் கூறும்போது, ‘சுவாரசியமான திரைக்கதை கொண்ட இப்படத்தை தமிழ் தெலுங்கு ரசிகர்களும் காண வேண்டும் என்ற எண்ணத்தில் ரீமேக் செய்கிறேன். பிறகு மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்படும்’ என்றார் கபீர் லால்.

அலுவலக பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை

நடிகை ஸ்ரீரெட்டி படவாய்ப்பு தருவதாக தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றிய தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார். அவரது புகாரில் சிக்கிய நடிகர் லாரன்ஸ் நான் தவறு செய்யவில்லை என்று மறுத்ததுடன் ஸ்ரீரெட்டி நடிப்பு திறமையை நிரூபித்தால் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறினார். இந்த நிலையில் ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்றும், சென்னையில் நிரந்தரமாக குடியேறப்போகிறேன் என்றும் அறிவித்த ஸ்ரீரெட்டி புதிய தமிழ் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். ஸ்ரீரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை எடுக்கின்றனர். படத்துக்கு ‘ரெட்டி டைரி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் ஸ்ரீரெட்டி நடிகையாகவே வருகிறார். சமூக சேவை பணிகளில் ஈடுபடப் போவதாகவும் பாலியல் தொல்லைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு…

ரசிகர்கள் முற்றுகையால் சூர்யா படப்பிடிப்பு ரத்து

தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே. என்ற படத்தில் நடிக்கிறார் சூர்யா. இதில் கதாநாயகிகளாக சாய்பல்லவி, ரகுல் பிரீத்சிங் நடிக்கின்றனர். என்.ஜி.கே. படம் அரசியல் சார்ந்த கதையம்சத்தில் தயாராவதாக தகவல். வித்தியாசமான சூர்யாவின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டு உள்ளனர். விறுவிறுப்பாக நடந்த இதன் படிப்பிடிப்பை செல்வராகவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நிறுத்தி வைத்தனர். இப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. சென்னை பூந்தமல்லியிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் சில காட்சிகளை படமாக்க படக் குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். சூர்யாவும் படப்பிடிப்பில் பங்கேற்க ராஜமுந்திரி சென்று இருந்தார். படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு சற்று தொலைவில் கேரவனை நிறுத்தி வைத்து மேக்கப் போட்டார். சூர்யா வந்த தகவல் அறிந்ததும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டனர். கேரவனில்…

விளைவுகளை திமுக சந்திக்க நேரிடும் அழகிரி

தி.மு.கவில் தங்களை சேர்க்கவில்லை என்றால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மு.க அழகிரி கூறியதாவது:- கலைஞர் உயிருடன் இருந்தபோது, தம்மை தி.மு.க சேர்த்துக் கொள்வதாக கூறியதாகவும், ஆனால் அதை சிலர் தடுத்து விட்டனர். கருணாநிதி இல்லாததால் கட்சியை காப்பாற்ற களம் இறங்கியிருக்கிறோம். கட்சியில் எங்களை சேர்க்கவில்லை என்றால் அதன் விளைவுகளை திமுக சந்திக்க நேரிடும். திமுக தொண்டர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தமது தலைமையில் 5 ந்தேதி அமைதிப் பேரணி நடைபெறும். என கூறினார்.

சீருடையை அகற்றுமாறு சரத்பொன்சேகாவே உத்தரவிட்டார்

விடுதலைப்புலிகளின் தலைவரின் உடலில் இருந்து சீருடையை அகற்றுமாறு சரத்பொன்சேகாவே உத்தரவிட்டார்” என ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சகி கலகே சிங்கள பத்திரிகையொன்றிற்கு தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக சசிகலகே , “பிரபாகரனின் உடலில் சீருடையை விட்டுவைப்பதற்காக சரத்பொன்சேகா இராணுவ அதிகாரிகளை ஏசினார். பிரபாகரனின் உடல் முதலில் தொலைக்காட்சிகளில் வெளியானபோது அது சீருடையுடன் காணப்பட்டது. இதனை பார்த்த சரத்பொன்சேகா கடும் சீற்றமடைந்தார். அவர் சீருடைளை அகற்ற உத்தரவிட்டார். இதன் பின்னர் நான் பிரபாகரனின் உடலை முகாமிற்கு எடுத்து சென்று சீருடையை அகற்றிய பின்னர் மீண்டும் அந்த இடத்திற்கு கொண்டு வந்தேன்” என குறிப்பிட்டுள்ளார். சகிகலகே இறுதி யுத்தத்தில் படையணியை வழி நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாண அமைச்சர்கள் நான்கு பேரும் லஞ்ச ஊழலில்

வடக்கு மாகாண அமைச்சர்கள் நான்கு பேரும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டார்கள் என வட மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார். மேலும், அங்கு உள்ளவர்களும் மோசடிக்காரர்கள். இங்கு உள்ளவர்களும் மோசடிக்காரர்கள். ஆனால் தன்னை மகா வீரராக பேசுகின்ற விக்னேஸ்வரன் தனது பிள்ளைகள் இருவரையும் சிங்களவர்களுக்கு மனம் முடித்துக் கொடுத்துள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். இவ்வாறு மனம் முடித்தவர்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள். அங்கு அவ்வாறு முடித்து விட்டு இங்கே வந்து நாடகமாடுகிறார். அந்த நாடகத்திற்குப் பின் கஜேந்திரகுமார் செல்லுகிறார். அதற்குள் சுமந்திரன், சம்பந்தன், மாவை, சுரேஷ் ஆகியோர் சித்து விளையாட்டு விளையாடுகிறார்கள் எனவும் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பொருளாதார வளம் இல்லாத ஊவா மாகாணம் மொத்த தேசிய உற்பத்தியில் 4 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. வட மாகாணம் 1.2 வீத…