தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிறுநீரக பிரச்சினையால் பாதிக் கப்பட்டுள்ளார். அவருக்கு தற்காலிகமாக டயாலிசிஸ் என்ற ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டயாலிசிஸ் சிகிச்சைக்காக வாரத்துக்கு இரண்டு முறை சென்னை கிண்டி அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு அவர் சென்று வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்ததும், நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வந்த விஜயகாந்த், அடுத்தகட்ட சிகிச்சைக்காக மீண்டும் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.