சிரஞ்சீவி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வரும் புதிய படம் சைரா நரசிம்ம ரெட்டி. சுதந்திர போராட்ட வீரர் உய்யலா வாடா நரசிம்ம ரெடடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் தயாராகி வருகிறது. ஆந்திராவில் மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கையை உருவாக்கியவராக நரசிம்மரெட்டி கருதப்படுகிறார்.
நரசிம்மரெட்டி கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடித்து வருகிறார். படத்தில் 8 நிமிட போர்க்கள காட்சியை படமாக்க ரூ.54 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கி வரும் இந்த படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, சுதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
—————-
விஜய் சேதுபதி – த்ரிஷா நடித்துள்ள ‘96’ திரைப்படம் இன்று வெளியாக இருந்தது. இந்நிலையில் திடீரென படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து தனது முழு சம்பளத்தையும் ரிலீஸுக்காக விஜய்சேதுபதி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட நேரத்தில் திரைப்படத்தை ரிலீஸ் செய்வதில் சில தயாரிப்பாளர்கள் கடைசி நேர சிக்கலை சந்திக்கின்றனர்.
நிதி பிரச்னை காரணமாக திரைப்படங்களை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியாமல் திக்குமுக்காடி வருகின்றனர். இந்நிலையில், விஜய் சேதுபதி நடித்துள்ள ’96’ திரைப்படத்தின் அதிகாலை முதல் ஷோ திடீரென ரத்து செய்யப்பட்டது. தயாரிப்பாளர் தரப்பில் இருந்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு கே.டி.எம் லைசன்ஸ் வழங்கப்படாததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கடைசி நேரத்தில் ரூ.4 கோடியை செட்டில் செய்ய வேண்டும் என பைனான்சியர் நெருக்கடி கொடுத்ததால் உரிய நேரத்தில் கே.டி.எம் லைசன்ஸ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த விஜய் சேதுபதி, சிக்கல் இல்லாமல் ‘96’ திரைப்படத்தை ரிலீஸ் செய்ய ரூ.4 கோடியை தனது சொந்த பணத்தை கொடுத்துள்ளார்.
————–
சினிமாத்துறையில் இருவர் மிகவும் எளிமையானவர்கள், பணிவு நிறைந்தவர்கள், ஜென்டில்மேன்கள். ஒருவர் ரஜினிகாந்த். இன்னொருவர் விஜய். சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. புதுவையில் விஜய் ஷூட்டிங்கில் இருந்தார். அன்று மாலை ஷூட்டிங் முடித்துவிட்டு, சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு இரவோடு இரவாக திரும்பி வந்தார்.
மறுநாள் படப்பிடிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக. அது மட்டும் கிடையாது. இவ்வளவு பெரிய ஸ்டார் போகிறார் என்றால் பிரஸ்சுக்கு சொல்வார்கள். 20, 30 கேமரா இருக்கும். உடன் 20, 30 பேர் வருவார்கள். ஆனால் இவர் போனதும் தெரியவில்லை. வந்ததும் தெரியவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் விமானத்தில் நானும் எனது மனைவியும் சென்றோம். அதே விமானத்தில் விஜய்யும் அவரது மனைவியும் வந்தனர். விமானம் தரையிறங்கியதும் பெட்டியை எடுக்க எனது மனைவி போனார். அதற்கு முன் அந்தப் பெட்டியை இன்னொரு கை எடுத்தது.
யாரெனப் பார்த்தால் சகோதரர் விஜய். என் மனைவியைப் பார்த்து, ‘நீங்க போங்க. நான் எடுத்து வருகிறேன்’ எனப் பெட்டியை அவரே எடுத்து வந்தார். இவ்வளவு பெரிய ஸ்டார் பணிவும், எளிமையுமாக இருப்பது ஆச்சரியப்படுத்தியது. நீங்கள் (விஜய்) பல படங்கள் பல கேரக்டர்கள் செய்திருக்கிறீர்கள். இதற்குப் பிறகு அடுத்தகட்டம் இருக்கிறது. அதை ரஜினி செய்துவிட்டார். நீங்களும் செய்ய வேண்டும். அதாவது, தேசிய அளவில் 3டி படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்பதுதான் அது. தமிழ்த் திரையுலகின் தளபதியாக இருக்கும் விஜய், இந்தியத் திரையுலகின் தளபதியாக மாற வேண்டும். அதுதான் என் விருப்பம். இவ்வாறு கலாநிதி மாறன் பேசினார்.