டென்மார்க்கின் டென் டென்ஸ்க வங்கியின் கடன் வலு ஏ-1ல் இருந்து ஏ-2ற்கு வீழ்த்தப்பட்டுள்ளது.
இதனுடைய கருத்து வங்கியின் நிதி ஒழுக்கம் சரியானதல்ல என்பதாகும். இப்படி பின் தங்கினால் சர்வதேச வங்கிகளிடம் பணத்தை வேண்டி வட்டிக்குக் கொடுக்கும் போது பிற நாட்டு வங்கிகள் அதிக வட்டி கேட்கும்.
ஆகவே பணத்தை வேண்டி வட்டிக்கு கொடுக்கும்போது இவர்களுடைய வட்டி வீதம் உயர்வடையலாம்.
இதனால் டென் டென்ஸ்க வங்கியின் கடன் தொழிற்பாடுகள் பின்னடைவு காண வழியிருக்கிறது.
இது மட்டுமல்லாமல் இவர்கள் செய்த தவறுக்கு பெரிய தண்டமும் கட்ட வேண்டிய நிலை இருக்கிறது. இது தொடர்பான விளக்கங்களை அளிக்க அதிக நேரத்தையும் ஒதுக்க வேண்டி வரும்.
டென்மார்க்கின் வெற்றிகரமான பெரிய வங்கி, அதிக இலாபம் உழைக்கும் வங்கி என்று பெயர் பெற்ற இந்த வங்கிக்கு வந்த அவலத்திற்கான காரணம் என்ன..?
ரஸ்ய அதிபரின் உறவினரின் பொருந்தொகை கறுப்புப் பணம் கைமாற உதவியிருக்கிறது. இதில் ஈரானும் சம்மந்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க நீதியமைச்சகம் விவகாரத்தை கவனத்தில் எடுத்துள்ளதால் கடன் மதிப்பீட்டகம் வங்கியின் தரத்தை குறைத்துள்ளது.
வங்கி இதிலிருந்து மீண்டெழுவது சுனாமியில் நீந்தித் தப்பியதைப் போன்ற கடினமான வேலையாகவே இருக்கும் என்று உணர முடிகிறது.
இதற்கிடையில் எஸ்லாண்டில் உள்ள தமது கிளையை அவசரமாக மூடியுள்ளதாக டென் டென்ஸ்க வங்கி கூறியிருக்கிறது.
அலைகள் 13.10.2018