கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு இயற்கை சீற்றங்களால், இந்தியாவிற்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட, வெள்ளம், பூகம்பம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் குறித்து, ஐநாவின் பேரிடர் தடுப்பு பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், உலகளவில் மொத்தமாக ஏழாயிரத்து 255 இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அவற்றால் 43 சதவீத வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர்களால், பொருளாதார பாதிப்புக்கு உள்ளான நாடுகளின் பட்டியலில், இந்தியா முதல் 5 இடங்களுக்குள் இருப்பது, ஐநா அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
முதல் இடந்த்தில் அமெரிக்காவும், 2 வது இடத்தில் சீனாவும், 3 வது இடத்தில் ஜப்பானும், 4 வது இடத்தில் இந்தியாவும் 5 வது இடத்தில் போர்டோ ரிகோவும் உள்ளன. தொடர்ந்து ஜெர்மனி, இத்தாலி, தாய்லாந்து, மெக்சிகோ, பிரான்ஸ் உள்ளன.