டென்மார்க்கின் புகழ் பெற்ற கவிஞரும் சைவத்தமிழ் பண்பாட்டு பேரவையின் தாபகருமான அமரர். வேலணையூர் பொன்னண்ணாவின் நினைவாஞ்சலி கேர்னிங் நகரில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பி.ப. 14.00 மணியளவில் நோரகேதவில் உள்ள கலாச்சார இல்லத்தில் நடைபெற இருக்கிறது.
டென்மார்க் தமிழ் கலைஞர்கள் சங்கம், சைவத்தமிழ் பண்பாட்டு பேரவை என்பன இணைந்து முன்னெடுக்கும் நிகழ்வு இதுவாகும்.
டென்மார்க்கின் பல பாகங்களில் இருந்தும் பேச்சாளர் பங்கேற்று அஞ்சலி நிகழ்வில் உரையாற்றுகிறார்கள். காலம் சென்ற ஒருவரை நினைவுகூர்ந்து டென்மார்க்கில் நிகழ்வுகள் நடப்பது மிகவும் குறைவு. அந்த வகையில் இது முக்கியமான நிகழ்வாகும்.
இனி ஆளாளுக்கு அறுபது காரணங்களை சொல்லி நடத்துவோரை துவள வைக்காமல் துள்ளி வரும் அருவியாக அனைவரும் அருகில் இருப்போரையும் அள்ளி வரவேண்டுமன்றோ..?
ஆர்வமுள்ள அனைவரும் கலந்து இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்காக பாடுபட்ட அந்த பெருமகனாரை அஞ்சலிக்க வேண்டியது கடமை.
இது குறித்து வெளியான விளம்பரம் வருமாறு.
அலைகள் 18.10.2018 வியாழன்