அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது என்பது அமெரிக்காவிற்கு ஆபத்தான நகர்வு என ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா – ரஷியா இடையே ஆயுதப் போட்டிக்கான பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்த வேளையில் 1987-ம் ஆண்டு இருநாடுகள் இடையே அணு ஆயுத ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இப்போது இந்த ஒப்பந்தத்தை ரஷியா மீறி வருவதாக குற்றம் சாட்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியேறப்போவதாக அறிவித்துள்ளார். அதிபயங்கர பேரழிவை ஏற்படுத்தும் போர் ஆயுதங்களை இனி தயாரிப்பதில்லை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என கூறுவது உலக அரங்கில் மீண்டும் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது என்பது அமெரிக்காவிற்கு ஆபத்தான நகர்வு என ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷியாவின் துணை வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜெய் ரியாப்காவ் பேசுகையில், “இது அமெரிக்காவிற்கு மிகவும் ஆபத்தான நகர்வாக இருக்கும். இதனை உலக நாடுகளால் புரிந்துக்கொள்ள முடியாது, தீவிர கண்டனங்கள் எழும்,” என கூறியுள்ளார்.