மதுரையில் நடிகர் வடிவேலு மகளின் திருமணம் ஆடம்பரம் ஏதுமின்றி நேற்று மிக எளிமையாக நடந்தது. திரையுலகப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் இன்றி நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமண விழாவில் பங்கேற்றனர்.
நடிகர் வடிவேலுவுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் 2 மகள் கள், ஒரு மகனுக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்துவிட்டது. கடைசி மகளான எம்பிஏ பட்டதாரி கலைவாணிக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீக மாகக் கொண்ட, சென்னை யில் வசிக்கும் பொறியாளர் ராமலிங்கம் (எ) ராம்குமாருக்கும் மதுரை ஐராவத நல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது. மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற விழாவில் மணமக்கள் வீட்டார், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
திரைப்படத்துறையைச் சேர்ந்த பிரப லங்கள், அரசியல் பிரமுகர்கள் யாரும் பங்கேற்கவில்லை. ஆனால் திமுக தலைமை நிலையச் செயலாளரும் வடிவேலுவின் நெருங்கிய நண்பருமான நடிகர் பூச்சி முருகன் மட்டும் இந்த திருமண விழாவில் பங்கேற்றார்.
ஏற்கெனவே நடிகர் வடி வேலுவின் மகன் மற்றும் 2 மகள் களின் திருமணமும் இதேபோன்று மிக எளி மையாகவே நடந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் வடிவேலுவின் மகள் திருமணம் நடப்பது பற்றி அறிந்த செய்தியாளர்கள் ஏராளமானோர் மண்டபம் முன் நேற்று காலை திரண்டனர். ஆனால், திருமண வீட்டார் செய்தியாளர்களை மண்டபத்துக் குள் அனுமதிக்கவில்லை. இதனால், செய்தியாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.