கொலை சதி திட்டத்தின் பின்னணியின் உண்மை நிலவரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பகிரங்கப்படுத்த வேண்டும் என தெரிவித்த பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ், அமைச்சரவை உள்ளக தகவல்களை கசிய விட்ட நான்கு அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.
பத்தரமுல்லை -நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் இன்று பலதுறைகளிலும் பிரச்சினைகள் காணப்படுகின்றது இவற்றிற்கு எல்லாம் ஆட்சி மாற்றத்தின் பின்னரே சிறந்த தீர்வினை பெறமுடியும் ஆகவே அரசாங்கம் வெகுவிரைவில் இடம் பெறவுள்ள தேர்தல்களை நடத்த வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்தார்.
—————
‘றோ’ அமைப்புடன் அமைச்சரவை அமைச்சர்கள் தொடர்புப்பட்டிருப்பார்களானால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைக எடுக்க வேண்டியது அவசியமாகும் எனத் தெரிவித்த பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, அவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்களுக்கான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான சதித்திட்டத்தின் பின்னணியில் றோ புலனாய்வு அமைப்பு இருப்பதாக குற்றச்சாட்டப்பட்ட நிலையில் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடி இருக்கலாம்
அமைச்சரவை கோட்பாடுகளை மீறி தகவல்களை கசியவிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்வும் அவர் சுட்டிகாட்டினார்.
பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.