சவுதி இளவரசருக்கு எதிரான ஊடகவியலாளர் ஜமால் காஸ்கோக்கி நன்கு திட்டமிட்டே கொல்லப்பட்டார் என்று துருக்கிய அதிபர் ஆதாரங்களுடன் தகவலை வெளியிட்டுள்ளார்.
புகைப்படங்கள், காணொளிகள், ஒலித்தொகுப்புக்கள் உட்பட பல்வேறு தகவல்களுடன் தனது தரப்பு நியாயங்களை துருக்கியின் தலைநகர் அங்காராவில் உள்ள பராளுமன்றில் சற்று முன்னதாக முன்வைத்து பேசியுள்ளார்.
உண்மையில் ஊடகவியலாளர் ஜமாஸ் காஸ்கோக்கி தற்செயலான ஒரு நிகழ்வில் கொல்லப்படவில்லை நன்கு திட்டமிட்டே கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார்.
அவரை கொல்வதற்கான கொலைஞர்கள் முதல் நாளே துருக்கி வந்து சேர்ந்துவிட்டதாக தெரிவித்த அவர் உடலத்தை மறைக்கும் பணியில் உள்ளுர் பேர்வழிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்றுள்ளார்.
உடலம் துண்டு துண்டாக வெட்டி காணாமலடிக்கப்பட்டுள்ளது என்று முன்னரே செய்தி வெளியானது தெரிந்ததே.
தொடர்ந்து பேசிய துக்கி அதிபர் ஆரவன் இது முடிவல்ல சடலத்தை தேடும் பணிகள் நடப்பதாகவும், இதில் சம்மந்தப்பட்ட மாயக்கரம் யார் என்பதையும் கண்டறியாமல் விடமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
01. சடலத்தை பிடித்தல் மறைத்தவர்களை கைது செய்தல் 02. பிரதான குற்றவாளியை தோலுரித்து உலக மன்றில் நிறுத்துதல் ஆகிய இரு தளங்களில் முன்னேறுவதாக தெரிவித்தார்.
தம்மைப் பொறுத்தவரை இத்துடன் விவகாரம் முடியவில்லை தொடர்கிறது என்றும் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் பொறுப்புள்ள அதிபரே தானாக வெளிவந்து ஆதாரங்களை சமர்ப்பிக்கும் போது உலக நாடுகள் இனியும் அமைதி காக்க முடியாது.
சவுதி என்ன சொல்லப்போகிறது.. காத்திருக்கிறது உலகம்.
மேலும் இந்த கொலையானது சவுதியின் உயர்மட்டத்திற்கு தெரியாமல் நடந்திருக்க முடியவே முடியாது. சம்மந்தப்பட்ட அனைவரும் சவுதியின் உளவுப்பிரிவின் அதி உயர்மட்ட உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
சவுதி இளவரசர் முகமட் பின் சல்மானே அந்த நாட்டின் உளவுப்பிரிவுக்கு பொறுப்பு ஆகவே அவர் முடி துறக்காமல் விவகாரம் முற்றுப்பெறாது என்றே தெரிகிறது. சவுதி இளவரசர் உள்நாட்டில் பலத்த சீர்திருத்தங்களை செய்வதால் அவருக்கு சொந்த நாட்டிலேயே ஓர் எதிரணி இருக்கிறது.
சவுதி மன்னர் இருந்தாலும் உண்மையான அதிகாரம் இருப்பது சவுதி இளவரசரிடம்தான் ஆகவே அவரை பதவி நீக்கம் செய்ய அங்கு யாருமே இல்லை.
இருப்பினும் சவுதி இளவரசருக்கு சீர்திருத்தங்கள் செய்ய முடியாத அழுத்தங்கள் வரலாம். சவுதியில் ஜனநாயகப் போராட்டம் வெடிக்கலாம். மன்னர் குடும்பம் செல்வாக்கிழக்கலாம்.
இதற்கிடையில் டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆனர்ஸ் சாமுவேல்சன் டென்மார்க்கில் உள்ள சவுதி தூதரலாயத்தில் இருக்கும் தூதுவரை இது குறித்து விசாரிக்க அழைத்துள்ளார்.
துருக்கி நாட்டின் அதிபரே சாட்சியாக நிற்பதால் விவகாரம் சர்வதேச நீதிமன்று போகவும் வாய்ப்புள்ளது. சவுதி இளவரசர் பதவி விலகுவதைவிட இந்தக்குற்றத்திற்கான தண்டனை பெறப்போவது யார் என்பதே அடுத்த கேள்வி.
ஒருவர் உடலத்தை துண்டு துண்டாக வெட்டி பசியாறிய அதிகார உச்சம் எது.. தேடுகிறது உலகம்.
சவுதி பத்திரிகையாளர் படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போனமைக்கு பெயர் பெற்ற சர்வாதிகார நாடு.. மத்திய கிழக்கில் மிக மோசமான சர்வாதிகார நாடென்றால் அது சவுதிதான் என்ற விமர்சனங்கள் உண்டு.
கோபங்கள் எப்படி வெடிக்கப் போகின்றன..?
கட்டாரின் முதுகில் குத்திய சவுதியின் முதுகில் துருக்கி குத்தியிருக்கிறது.
அலைகள் 23.10.2018