மாகாண சபை முறமையூடாகவே தமிழ் மக்களது பிரச்சனைகளை தீர்த்து வைக்கலாம் என்பதை ஆரம்ப காலம் முதலே சொல்லி வந்திருந்தோம். எமது கட்சி வடக்கு மாகாண சபையை கைப்பற்றியிருந்தால் இதனை வளமான மாகாணமாக்கி பாலும் தேனும் ஓட வைத்திருப்போம். இது காலம் கடந்துவிட்டது, இதில் ஒன்றும் இல்லை என்றவர்கள் பின்னர் இச் சபையை நாம் கைப்பற்றி விடப் போகின்றோம் என்பதற்காக மக்களை உசுப்பேற்றி வெற்றி பெற்றார்கள்.
பின்னர் இதற்கு அதிகாரம் இல்லை என்றார்கள். பின்னர் தாங்களே அதிகார துஸ்பிரயோகம் நடந்த்து என்றார்கள். அரசாங்கம் நிதி தரவில்லை என்றார்கள். பின்னர் நிதி மோசடி நடந்த்து என்றார்கள். ஜந்து வருடத்தை வீண்டித்து விட்டோம் என்கிறார்கள். செய்ய கூடியவற்றை செய்யவில்லை என்கிறார்கள். எல்லாவற்றையும் இவர்களே கூறுகின்றார்கள். இவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறையுமில்லை, அதனை செய்வதற்கு ஆற்றலுமில்லை.
இம் மாகாண சபை முறமையில் நம்பிக்கையுள்ள, அதனை கொண்டு நடாத்த கூடிய ஆற்றலுள்ள, அக்கறையுள்ளவர்களிடம் இச் சபை கிடைத்தாலே அதன் பயன் மக்களை முழுமையாக சென்றடையும்.