மாகாண சபையின் கடந்த ஜந்து வருடங்களையும் கூறுவதாயின் மிக நீண்ட நேரம் தேவை. ஒரு சில நிமிடங்கள் போதாது. எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற போது இம் மாகாண சபை கடந்த ஜந்து வருடங்களாக எதனையுமே செய்யவில்லை. அரசாங்கத்திடம் இருந்து நிதிகளை பெற்று அபிவிருத்திகளை செய்வது ஒன்று, புலம்பெயர் வளங்களை ஒன்றினைந்து அதனூடாக அபிவிருத்தி செய்வது, நியதிச் சட்டங்களை உருவாக்கி மாகாண சபையை பலப்படுத்துவது இவை உட்பட எதனையுமே இம் மாகாண சபை செய்யவில்லை.
மாகாண சபைக்கு அதிகாரம் போதாது என்று சொல்பவர்கள் இதற்கு வரக்கூடாது. அதற்காக மாகாண சபைக்கு அதிகாரங்கள் கூரையை பிய்த்துக்கொண்டு இருக்கிறது என்றில்லை. ஆனால் இருக்கின்ற அதிகாரங்களை செழுமையாகவும் திறம்படவும் செயற்படுத்தகூடிய ஆளுமை கொண்ட விடயங்களை தெரிந்த இளையவர்கள் புதிய சபைக்கு வர வேண்டும்.