இம் மாகாண சபை உருவாகிய போது சிறிய ஈழம் கிடைத்தது போலவே மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இன்று அவை ஏமாற்றமாகவே அமைந்துவிட்டது. பெரிதாக எதனையும் இச் சபை செய்யவில்லை. மாகாண சபை உறுப்பினர்களே முதலமைச்சரை செயற்படவிடாமல் செய்துள்ளார்கள். அதேநேரம் முதலமைச்சரும் செய்யகூடியவற்றை செய்யாமல் விட்டுள்ளார்.
இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியான நேரத்தில் தலையிட்டு ஒழுங்கான சபையை நடாத்த வழி ஏற்படுத்தியிருக்க வேண்டும். கூட்டமைப்பு இதில் தவறு விட்டிருக்கிறது. அதே நேரம் முதலமைச்சரை செயற்படாமல் விடாமலும் சில சக்திகள் செயற்பட்டிருந்தார்கள்.
பதில் 02 : மிகவும் குழப்பகரமான சபையே உருவாகும் வாய்ப்புள்ளது. எனவே இவற்றை தவிர்த்து மக்களது தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் வகையில் சரியான சபையை உருவாக்க ஒன்றினைய வேண்டும். இம் மாகாண சபைக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களே உள்ளது. அதில் பணியாற்றுவது கடினமே. ஆனாலும் நாமாகவே துனிந்து செயற்பட்டால் அதனை செய்ய கூடியதாக இருக்கும்.