முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆகியோரிற்கு வீடுகளிற்கு வெடிபொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளிற்கு அனுப்பப்படும் பொருட்களை சோதனையிட்ட அதிகாரியொருவர் இதனை கண்டுபிடித்துள்ளார்.
ஓக்டோபர் 23 ம் திகதி ஹிலாரி கிளின்டனிற்கு வெடிபொருட்கள் அனுப்பப்பட்டதாக அமெரிக்க புலனாய்வு பிரிவொன்று தெரிவித்துள்ளது.
இதன் பின்னர் 24 ம் அதிகாலை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வீட்டிற்கு இனந்தெரியாதவர்கள் அனுப்பிய வெடிபொருள் பொதி கண்டுபிடிக்கப்பட்டது எனவும் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
குறிப்பிட்ட முகவரியை அவை சென்றடையும் முன்னர் அவற்றை கண்டுபிடித்துவிட்டோம் முன்னாள் ஜனாதிபதியோ வெளிவிவகார அமைச்சரோ குறிப்பிட்ட பொருட்களை பெறவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்பிஐ அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளதுடன் விசாரணைகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
————–
அமெரிக்காவில் சிஎன்என் அலுவலகத்திற்கும் சந்தேகத்திற்கிடமான பொதிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன
முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆகியோரிற்கு இனந்தெரியாத நபர்கள் வெடிகுண்டுகள் அடங்கிய பொதிகளை அனுப்பிவைத்துள்ளதால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ள நிலையிலேயே மர்ம பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன.
நியுயோர்க்கின் டைம்வோர்னர் நிலையத்தில் உள்ள சிஎன்என் அலுவலகத்திற்கு வெடிபொருட்கள் அடங்கிய பொதி அனுப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த அலுவலகத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சிஐஏயின் முன்னாள் இயக்குநர் ஜோன் பிரெனின் பெயருக்கே குறிப்பிட்ட பொதி அனுப்பப்பட்டுள்ளது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஒபாமா ஹிலாரி ஆகியோரிற்கு அனுப்பப்பட்ட பொதியில் காணப்பட்ட அதேபொருளே சிஎன்என் அலுவலகத்திற்கு வந்த பொதியிலும் காணப்பட்டது என அதிகாரியொருவர் தெரிவித்தள்ளார்.