அமைச்சரவையில் இடம் பெற்ற விவகாரங்களை இந்தியாவின் “ரோ” அமைப்பிற்கு தகவல் வழங்கிய நான்கு அமைச்சர்கள் தொடர்ந்தும் சுதந்திரமாக செயற்படுகின்றமை ஆபத்தானதென விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
விவசாயத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் ,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் குறிப்பிடாத ஒரு விடயத்தை குறிப்பிட்டதாக இந்திய ஊடகவியலாளருக்கு பொய்யான தகவல்களை வழங்கிய நான்கு அமைச்சர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பிற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தும் விதமாகவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்த நால்வரும் செயற்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” என தெரிவித்தார்