பத்திரிகையாளர் ஜமால் கசோஜியின் உடல் எங்குள்ளது என தெரிவிக்குமாறு துருக்கி ஜனாதிபதி டயிப் எர்டகோன் சவுதி அரேபியாவை கோரியுள்ளார்.
பத்திரிகையாளர் படுகொலை தொடர்பில் சவுதி அரேபியாவில் கைதுசெய்யப்பட்டுள்ள 18 பேரிற்கும் யார் இந்த கொலைக்கான உத்தரவை பிறப்பித்தனர் என்பது தெரிந்திருக்கவேண்டும் என துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜமால்கசோஜியின் உடல் எங்குள்ளது என்பதும் அவர்களிற்கு தெரிந்திருக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்திரிகையாளரை கொலை செய்வதற்கான உத்தரவை பிறப்பித்த நபரை நீதியின் முன் நிறுத்தவேண்டும் சந்தேகநபர்களை துருக்கிக்கு நாடு கடத்தவேண்டும் எனவும் ஜனாதிபதி எர்டோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
என்ன நடந்தது என்பதை என்பது குறித்து சவுதி அரேபியா தெரிவித்துள்ள புதிய விடயங்களை சிறுபிள்ளை தனமானது வேடிக்கையானது என வர்ணித்துள்ள துருக்கி ஜனாதிபதி சந்தேக நபர்களிடமிருந்து உரிய பதில்களை பெற முடியாவிட்டால் அவர்களை எங்களிடம் ஒப்படையுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்றது துருக்கியில் என்பதால் நாங்கள் விசாரணைகளை மேற்கொள்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்