இலங்கை பிரதமராக பதவியேற்ற ராஜபக்சேவுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணியில் ரணில் விக்கிரம சிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி இடம்பெற்றிருந்தது. 2015 பொதுத் தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பெற்றது.
இந்த கூட்டணியில் சமீப காலமாக பிளவு ஏற்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவிற்கு எதிரான சிறிசேன ஆதரவாளர்கள் சிலர் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டு வந்தனர்.
இந்தநிலையில்,இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே பதவி நீக்கம் செய்யப்பட்டு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதிவியேற்ற நிலையில், அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தனது உச்ச கட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரம சிங்கே தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணி வாபஸ் பெற்றதை அடுத்து உடனடியாக இந்த அதிரடி அரசியல் மாற்றம் நடைபெற்றுள்ளது.
இந்தநிலையில் லங்கை பிரதமராக பதவியேற்ற ராஜபக்சேவுக்கு பாஜக மூத்த தலைவர் சுபிரமணியன் சுவாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
எனது நண்பரான ராஜபக்சே இலங்கை பிரதமராகி உள்ளார் என பதிவிட்டுள்ளார்.
My friend Mahinda Rajapaksa has just been sworn in as Prime Minister of Sri Lanka
— Subramanian Swamy (@Swamy39) October 26, 2018