எமது முடிவை நாம் ஆராய்ந்து எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழர் கூட்டமைப்பு தலைவர் சம்மந்தன் தனது பதவியின் எதிர்காலம் பற்றி எதுவும் கூறாது கருத்துரைத்துள்ளார்.
நாட்டின் அரசியல் நிலைகுறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சம்பந்தன், “இரு நபர்களின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது, நாட்டின் கொள்கையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்.
பாராளுமன்றின் பெரும்பான்மையை கருத்தில் கொண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களையும் கருத்தில் கொண்டே எங்களது தீர்மானங்கள் அமையுமே தவிர தனி கட்சிகளைப் பற்றியோ தனி நபர்களைப் பற்றியோ நாங்கள் சிந்திக்கவில்லை” என பதிலளித்தார்.
அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளின் முன்நகர்வுகள் தொடர்பாக மிக நுன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளன.
இலங்கை அரசியல் யாப்பிற்கு மதிப்பளித்து அரசியல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முன்நகர்வுகள் அமைய வேண்டும் எனவும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தங்களது அரசியல் கடமைகளை உணர்ந்து செயற்பட வேண்டும் என இரு நாடுகளும் அறிவித்துள்ளன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் கவலையடைவார்கள் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவும் சீனாவும் இலங்கையின் செல்வாக்கை பெறுவதற்கான கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளன,மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்தன என தெரிவித்துள்ள நியுயோர்க் டைம்ஸ் மகிந்த ராஜபக்ச இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களிற்காக சீனாவிடமிருந்து பெருமளவு கடனை பெற்றார் இந்த திட்டங்களில் சில எந்த வித பொருளாதார நன்மையையும் கொண்டிராதவை என குறிப்பிட்டுள்ளது.
இம்மாத ஆரம்பத்தில் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சீனாவின் கடன் பொறி இராஜதந்திரத்தை கடுமையாக விமர்சித்திருந்ததுடன் அதற்கான உதாரணமாக இலங்கையை சுட்டிக்காட்டியிருந்தார் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சீனாவின் உதவியுடன் நிர்மானிக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் வேகமாக வளர்ந்து வரும் கடற்படையின் தளமாக மாறும் என அவர் குறிப்பிட்டிருந்தார் எனவும் நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சீனா குறிப்பிட்ட துறைமுகத்தை இராணுவ நோக்கங்களிற்காக பயன்படுத்தலாம் என மேற்குல அதிகாரிகள் அச்சம்கொண்டுள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமர் ரணிலுக்கு ஆதரவு வழங்கஉள்ளதாக சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியில் 6 ஆசனங்கள் இருக்கின்ற நிலையில் தமது ஆதரவை தொடர்ந்து பிரதமர் ரணிலுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தனது ஆதரவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Tweet
Del