அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் நகரில் யூத மக்களின் ஜெபக்கூடம் அருகே மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முதலில் 4 பேர் பலியானதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்தனர். துப்பாக்கி சூட்டில் 3 போலீஸ் அதிகாரிகள் மீதும் குண்டு பாய்ந்தது. இதையடுத்து, அந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். துப்பாக்கிச்சூட்டிற்கான உறுதியான காரணம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.
இந்நிலையில் பலி எண்ணிக்கை தற்போது 11 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய ராபா்ட் பவா் என்ற நபரை காவல் துறையினா் கைது செய்துள்ளனர். அவா் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்த துப்பாக்கிச்சுடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரங்கலை தெரிவித்ததுடன், அங்கு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்தார்.
மேலும் அந்த நாட்டு கவர்னர் டாம் உல்ஃப் தனது டுவிட்டர் பதிவில் துப்பாக்கிச்சூட்டிற்கு தனது கண்டனத்தையும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.