தமிழ், சிங்கள மக்கள் ஒன்றிணைவதற்கான சந்தர்ப்பமொன்று உருவாகியுள்ளது. இதனை தமிழ் மக்கள் சரியாகப் புரிந்துகொண்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்த முன்வர வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் கலாநிதி சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.இலங்கையில் வாழும் தமிழ், சிங்கள மக்களுக்கிடையில் ஒற்றுமையும் சமத்துவமும் ஏற்படக்கூடிய முக்கிய காலகட்டம் தற்போது உருவாகியுள்ளது. கடந்த 70 வருடங்களுக்கு முன்னர் செல்வநாயகம் முன்வைத்த உடன்படிக்கை முறிவடைந்ததன் காரணமாகவே ‘புலிகள்’ உருவாகினார்கள்.
இதனால் இடம்பெற்ற கசப்பான உணர்வுகளை நாம் மறக்க வேண்டும். தற்போது உருவாகியுள்ள சிறப்பான சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதற்காக தமிழ் மக்கள் அனைவரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
———-
நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்மிடம் உள்ளனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர், கடந்த புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதலாவது மத்திய செயற்குழு கூட்டத்திலேயே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி,நிலையான அரசாங்கத்தை அமைக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு மற்றும் ஏனைய குழுக்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி நியமிக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும் முக்கியமான சந்தர்ப்பங்களில் அரசியல்குழுவை அமைத்து தீர்மானங்களை எடுப்பதற்கான, சுதந்திர கட்சியின் யாப்பில் இரண்டு திருத்தங்களை உள்ளடக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே தற்போது மஹிந்த ராஜபக்ஷவே இந்நாட்டின் பிரதமராவார். ஜனாதிபதியின் தீர்மானத்தை மீறி யாராலும் செயற்பட முடியாது. சபாநாயகருக்கும் அந்த அதிகாரம் கிடையாது என்பதும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
—————-
பாராளுமன்றமானது எதிர்வரும் 7 ஆம் திகதி கூட்டப்படவிருந்த நிலையில் அதுபோலியான பிரசாரம் என அரசாங்க ஊடக பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.மேலும் தற்போதைய நிலைக்கமைய எதிர்வரும் 16 ஆம் திகதியே பராளுமன்ற கூட்டத்தொடரானது கூட்டப்படுமென அரசாங்க ஊடக பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
—————
தேசிய ஒற்றுமை மற்றும் முஸ்லிம் விவகார இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பெளசி பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் குறித்த பதவி பிரமாணம் இடம் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.