டென்மார்க் போலீசாருக்கு பல மாதங்களாக சவாலாக இருந்து வருவது பாலங்களில் இருந்து வாகனங்கள் மீது கல்வீசும் பேர்வழிகள்தான்.
இவர்கள் செய்யும் வேலை பிரதான வீதிக்கு மேலால் போகும் பாலத்தில் நின்று கொண்டு பாரிய கல்லை வரும் வாகனங்களில் மீது போட்டு வேடிக்கை பார்ப்பதாகும்.
இவ்விதம் கல் ஒன்றை வீசினால் வாகனம் விரைவுச் சாலையில் போகும் வேகத்திற்கும் புவியீர்ப்பு சக்தியால் கல் வரும் வேகத்திற்கும் இடையே கூட்டல் வேகம் நிகழும், விளைவு பேரபத்தாகும்.
இதுபோல ஒரு தடவை வீசப்பட்ட கல்லால் சுமார் 36 வயதுடைய ஜேர்மனிய பெண்மணி ஒருவர் மரணமடைந்து கார் விபத்துக்குள்ளாகி கணவனும், பிள்ளையும் பாதிப்படைந்தது தெரிந்ததே.
இருந்தாலும் போலீசாரால் சரியான குற்றவாளியை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கல் ஸ் ரீன் என்ற இடத்தில் பாலத்தின் மேல் நின்று கல்லை வாகனத்தின் மீது போட்ட 17 வயது பெண்மணி ஒருவர் அகப்பட்டுள்ளார்.
இவர் வீசியது ஒரு மாபிள் கல்லாகும். இவருடைய கைது இது போன்ற பல கல்வீச்சு சம்பவங்களின் பின்னால் உள்ள மர்மத்தை உடைக்கலாம் என்று போலீஸ் கருதுகிறது.
கல் என்றால் தமிழில் கல் என்பது பொருள்.. ஸ் ரீன் என்றால் கல் என்று டேனிஸ் மொழியில் பொருள். ஆகவே தமிழிலும் டேனிசிலும் கல்கல் என்ற பெயர் கொண்ட ஊரிவ் வந்து கல் வீசினால் சும்மா போக நாமென்ன மாரியா கொக்கா..? என்பது போல மடக்கியுள்ளது போலீஸ்.
இப்பெண்மணியே கல் வீசும் காரிகை என்பதை பல அயலவர் போலீசாருக்கு காட்டி கொடுத்துள்ளனர் என்பது இதுவரையான செய்தி
கல் கல் என்று பெயர் வைத்த இடத்தில் இருந்து கல்லை வீசினால் அதுவும் மாபிள் கல்லை வீசினால் சும்மா விடுமா கல்ஸ்ரீன்.
அலைகள் 04.11.2018