டென்மார்க்கிலும், பாரீசிலும் நடைபெற இருந்த இரண்டு பயங்கரவாத தாக்குதல்கள் முறியடிக்கப்பட தாம் உதவியதாக இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெட்டன் யாகு கூறியாக அந்த நாட்டு பத்திரிகையான கார்ற்ஸ் கூறுகிறது.
டென்மார்க்கில் ஈரானிய கொலையாளி ஒருவரை தடுக்க முயன்று பாதைகளை மூடி தேடிய நிகழ்வு கடந்த செப்டெம்பர் 28ம் திகதி இடம் பெற்றது தெரிந்ததே.
இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் ஈரானிய உளவுப்பிரிவின் கைவரிசை இருப்பதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.
ஆனால் இன்று வெளியான ஈரானிய பத்திரிகைகளைப் புரட்டினால் ஈரானிய உளவாளிகள் ஐரோப்பாவிற்குள் நுழைந்துள்ளதாக கூறப்படும் விவகாரத்தை ஐரோப்பாவுடன் இணைந்து கட்டுப்படுத்தத் தயார் என்று கூறியிருக்கிறது.
இது ஊடகவியலாளரை கொலை செய்துவிட்டு விசாரணையில் சேர்ந்தியங்க தயார் என்று சவடால் விட்ட சவுதியின் குரல் போல இருக்கிறது.
களவெடுத்தவனே வழக்கை விசாரிக்க வருவதாக குரல் கொடுக்கும் கொடிய காலமொன்று உலக அரங்கில் உருவாகி வருவது, ஏழை பேதைகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
அலைகள் 04.11.2018