நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய அமெரிக்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு மைத்திரி கூறிய திகதிகள் அவர் ஒரு பிரச்சனையை எப்படி தீர்ப்பார் என்பதற்கு அடையாளமாக உள்ளன.
5ம் திகதி 7ம் திகதி 14ம் திகதி கெகலிய கூற்றின்படி 16ம் திகதிதான் என்று இரண்டு வாரங்களில் 4 திகதிகள் மாறியுள்ளன.
ஆகவே மைத்திரியால் எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடியதென வெளி நாடுகள் கவலைப்பட நியாயம் இருக்கிறது.
இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் வெளி நாடுகளுக்கு கவலை ஏற்படுத்தியுள்ளன. அதில் பிரிட்டனும் ஒன்று. பல நூற்றாண்டுகள் அந்த நாட்டின் வாத்தியாராக இருந்த பிரித்தானிய பேரரசு பெற்ற குழந்தைதான் இலங்கை என்று என்றாவது வெட்கப்படாத பிரிட்டனை இலங்கையின் சிங்கள தலைவர்கள் மதிக்கமாட்டார்கள் என்பது கடந்த கால வரலாறு.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹேதர் நயட் தனது டுவிட்டர் பக்கத்தில், பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு ஏற்படும் தாமதம் இலங்கையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
நாட்டினுள் நல்லாட்சி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இலங்கையின் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பில் கவலையடைவதாக பிரித்தானியா கூறியுள்ளது.
இலங்கையின் பிரதமராக யாரை ஏற்றுக் கொள்வது என்பது சம்பந்தமாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் எழுந்த கேள்விக்கு பிரித்தானியாவின் ஆசிய பசிபிக் பிராந்திய அமைச்சர் மார்க் பீல்ட் இவ்வாறு கூறியுள்ளார்.