இலங்கையின் பாராளுமன்றில் ஐ.தே.க அணிக்கு பெரும்பான்மை இருந்தும் அதை நிறுவ முறைப்படி வாய்ப்பளிக்காமல் பாராளுமன்றை கலைத்தது உலக நாடுகளுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது.
இதனுடைய அடுத்த கட்டம் மிக ஆபத்தானது என்பதை சிறீலங்காவின் தலைமைகள் அறியாது போனது இந்த கொள்கையை வகுத்த அமெரிக்காவிற்கு கிடைத்துள்ள அடிதான்.
இலங்கைக்கான செயல் பொறிமுறை அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளின் சிந்தனையில் இருந்து பெரிதும் வேறுபடுகிறது என்பதை யுத்தத்தின் பின் ஒன்பது ஆண்டுகள் ஆகி, எதுவுமே இல்லாத சூனியத்தில் பாவம் அமெரிக்கா கண்டறிந்து இப்படியொரு அறிக்கையை வெளியிட்டுன்னது.
இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் கவலையடைந்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அது அரசியல் நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உறுதியான பங்காளர் என்ற வகையில், ஸ்திரத்தன்மை, சுபீட்சத்தை உறுதிபடுத்த ஜனநாயக நிறுவனங்கள், நடவடிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் என்று நாம் கருதிகிறோம் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. .