மகிந்தவை தோற்கடிக்க விடாது குழப்பம் பாராளுமன்று ஒத்திவைப்பு

சிறீங்காவின் பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்து தேர்தலுக்கு உத்தரவிட்ட கதை நேற்றோடு முடிந்து புதிய சூழல் உருவாகியிருக்கிறது.

பாராளுமன்றம் நீதிமன்ற உத்தரவின்படி மறுபடியும் கூடியிருக்கிறது. மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்துள்ளது. அவரை தோற்கடிக்குமளவுக்கு பெரும்பான்மை ஐ.தே.கவிடம் இருக்கிறது. 122 பேர் ஆதரவாக கையொப்பமிட்டுள்ளனர்.

பல்டியடித்து அமைச்சர் பதவி பெற்றவர்கள் பலர் பதவியை தூக்கி வீசிவிட்டு மறுபடியும் ஐ.தே.கவுடன் இணைந்துள்ளனர்.

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாராளுமன்றம் நாளை 10.00 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நீதிபதியின் தீர்ப்பிற்கு பின்னர் நடந்த முக்கிய சம்பவங்கள் வருமாறு.. :

—————–
கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விஷேட கூட்டம் சற்றுமுன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

இன்று (14) காலை 8.30 மணியளவில் கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்திற்கு நேற்று இரவு சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்திருந்தார்.

————–

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விஷேட கூட்டம் இன்று காலை 08.30 மணியளவில் இடம்பெற்றது.

இந்நிலையில் இன்று காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

—————-

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி சார்பில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கூறினார்.

இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்றைய தினமே இடம்பெற உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பியசேன கமகே மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வு.

—————-

அண்மையில் புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

மீண்டும் அவர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்வதாக தெரிவித்ததாக கூறினார்.

——————

பாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் தற்போது சற்று அமைதியற்ற நிலை தோன்றியுள்ளது.

——————-

பாராளுமன்றத்தில் இன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் கூறியுள்ளார்.

இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்து அவர்கள் வாக்களித்துள்ளதாக ஆர். சம்பந்தன் கூறியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இன்று காலை கையளிக்கப்பட்டது.

ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 122 பேர் இந்த பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர்.

————–

அமைச்சரவையின் தீர்மானங்களை தெரிவிப்பதற்கான அமைச்சரவை கலந்துரையாடல் இன்று (14) பகல் 2 மணிக்கு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளது.

—————-

பாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கோரிக்கை விடுத்தார்.

எனினும் வாக்ககெடுப்பு நடத்தவிடாமல் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்தினர்.

இதனையடுத்து சபாநாயகர் பாராளுமன்றத்தை நாளை காலை 10.00 மணி வரை ஒத்தி வைத்தார்.

Related posts