அலைகளின் புதிய காலம் ஆரம்பம்.. அலைகள் கூகுள் இயந்திரத்தை வைத்து தனது செய்திகளை எழுதும் காலம் ஆரம்பித்துள்ளது. இது முதல் செய்தி.. தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 64 வது பிறந்த தினத்தில் அறிமுகமாகிறது.
டென்மார்க்கில் உள்ள புத்தக கடைகளில் விற்பனை அதிகரித்திருக்கின்றது.
இதற்கு காரணம் வாசிக்கும் பழக்கம் மக்களிடையே பெருகி செல்கிறது.
இந்த ஆண்டு விற்பனையானது 1.7 பில்லியன் குறோணர்கள் ஆகும், சென்ற ஆண்டைவிட இது அதிகமான தொகையாகும்.
இந்த ஆண்டு டிசம்பர் நத்தார் கொண்டாட்டங்கள் வருவதால் புத்தக விற்பனை மிகவும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
காரணம் இது புத்தகங்கள் அதிகமாக விற்பனையாகும் காலமாகும். மக்கள் புத்தகங்களை வாங்கி பரிசாக கொடுப்பார்கள் , இத்தகைய பழக்கம் டேனிஸ் மக்களிடையே நீண்ட கால கலாச்சாரமாக இருக்கிறது.
அதே வேளை புத்தகங்களை எழுதும் எழுத்தாளர்களோ இங்கு நடைபெறும் விற்பனையால் கணிசமான பணத்தை உழைத்தாலும் , அது தமக்கு போதியதாக இல்லை என்று கூறுகிறார்கள்.
பெண் எழுத்தாளர் ஒருவர் கூறும் பொழுது, தான் எழுத்தை மட்டும் நம்பி வாழ்வதாகவும் ஆனால் சிறிய வீட்டிலேயே இருப்பதாகவும் தனது வருமானம் போதியதாக இல்லை என்றும் கூறுகிறார்.
ஆனால் சின்னஞ்சிறிய நாடான டென்மார்க்கில் கோடிக்கணக்கான குறோணர்களுக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுவது ஆச்சரியம் தரும் விடயமாகவே தொடர்ந்தும் இருந்து வருகிறது.
அதேவேளை இணையம் மூலம் விற்பனையாகும் புத்தகங்களும் சிறப்பாகவே போகின்றன.
இதனால் டென்மார்க் புத்தக சந்தைக்கு சிறப்பான எதிர்காலம் ஒன்று இருப்பதாக இன்றைய காலை செய்திகள் கூறுகின்றன.
அதேவேளை டென்மார்க்கில் எழுதப்படும் தமிழ் புத்தகங்களும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இப்பொழுது சிறப்பாக விற்பனையாகி வருகின்றன.
டென்மார்க்கில் உள்ள ரியூப் தமிழ் நிறுவனம் இலங்கையில் புத்தக சந்தை ஒன்றை ஆரம்பித்திருக்கிறது!
இந்த புத்தக சந்தையில் உலகப் புகழ்பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற புத்தகம் இரண்டாவது பதிப்பாக வெளியாகி இருக்கிறது.
இதுபோல நத்தர் வெளியீடாக ஹிலரி கிளிண்டன் தோற்றாரா தோற்கடிக்கப்பட்டாரா என்ற புத்தகம் இரண்டாவது பதிப்பாக வெளிவர இருக்கிறது.
டென்மார்க் ரியூப் தமிழ் நிறுவனம் இலங்கையில் ஆரம்பித்துள்ள புத்தக சந்தையானது மாதம் ஒரு புத்தகம் என்ற அடிப்படையில் வெளியிட்டு வருகிறது!
முன்னர் இலங்கையில் வீரகேசரி என்ற பத்திரிகை இதுபோல ஒரு முயற்சியை செய்தது பின்னர் அதை கைவிட்டு விட்டது தெரிந்ததே!
இது ஒரு புறமிருக்க, டென்மார்க்கை போலவே புத்தகங்களின் விற்பனை தமிழகத்திலும் பெருகி வருகிறது. உதாரணமாக ஆனந்த விகடன் புத்தகச் சந்தை மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது!
டென்மார்க்கில் புத்தகங்களை எழுதுவோருக்கு டேனிஷ் புத்தக நிறுவனங்கள் 15 வீத வருமானத்தையே கொடுக்கிறார்கள் ” இது போதியதல்ல ” என்று பெண் எழுத்தாளர் ஒருவர் கூறுகிறார்!
எனவே இந்தத் இந்த தொகையை 20 வீதமாக அதிகரித்து தந்தால் நல்லது என்கிறார் அந்த பெண்மணி!
அதேவேளை இலங்கையில் உள்ள எழுத்தாளர்களுக்கு சிறந்த புத்தக விற்பனை சந்தையை ஏற்படுத்தும் ரியூப் தமிழின் முயற்சி வெற்றியடைய பலரும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
மனிதன் இணைய வெள்ளத்தில் அடிபட்டு இப்போது பழைய புத்தகம் வாசிக்கும் மரபுசார் வாழ்வு தேடி நகர ஆரம்பித்துள்ளான். எழுத்தாளர்களுக்கு பொன்னான காலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்த செய்தி வாய்மூலம் சொல்லச் சொல்ல கூகுள் றோபோ எழுதிய தமிழாகும்.
” சொல்ல சொல்ல இனிக்குதடா.. – முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரை
சொல்ல சொல்ல இனிக்குதடா.. முருகா..!”
அலைகள் 26.11.2018