நான்கே தினங்களில் 500 கோடிகளை தாண்டும் 2.0

லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் ரஜினிகாந்த் அக்ஷய்குமார் எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள 2.0 திரைப்படம் இம்மாதம் 29ஆம் திகதி திரைக்கு வருகிறது !

இந்தப் படம் சுமார் பத்தாயிரம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது !

தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படம் முதல் நாளில் ஒரு மிகப் பெரும் தொகையை வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!

பலரும் அது பற்றிய கணக்குகளை வெளியிட்டு வருகிறார்கள். அதன்படி இப்படம் முதல்நாள் மிகப் பெரும் தொகையை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது !

படம் வெளியாகும் தினம் வியாழக்கிழமை , மறுநாள் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களும் வேலை நாட்கள். எனவே அந்த இரண்டு நாட்களில் வசூலாகும் தொகையை விட சனி ஞாயிறு கிழமைகளில் வசூலாகும் தொகை அதிகமாக இருக்கலாம்.

முதல் நாளில் 100 கோடி கடந்தால் நான்கு நாட்களிலேயே இப்படம் 500 கோடி வசூலைத் தர வாய்ப்புள்ளது.

படம் நன்றாக இருந்தால் அந்த வசூல் அதற்கடுத்த நாட்களிலும் தொடரும் , அப்படி நடந்தால் இந்த படம் நிச்சயம் பாகுபலி 2 படத்தின் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கலாம் .

மற்றொரு பக்கம் இந்தியில் வெளியாகும் படத்திற்கு வட இந்தியாவில் பெரிய எதிர்பார்ப்பை படக்குழுவினர் ஏற்படுத்தவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

மிகப் பெரிய முதலீட்டில் லைக்கா நிறுவனம் உருவாக்கிய இந்தப் படம் ஈழத்தமிழர் ஒருவருடைய முதலீட்டில் வருவதானது ஈழத் தமிழர்களுக்கு பெருமை தரும் என்று தமிழகத்தில் பலரும் பேசிக் கொள்கிறார்கள் .

நேற்று இதுபற்றி ஊடகத்திற்கு கருத்துரைத்த நடிகர் ஒருவர் ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்ற காரணத்தினால் தான் இந்தியத் திரைப்படங்கள் இவ்வளவு பெரிய பொருளாதார உலகத்திற்குள் போயிருக்கிறது என்று கூறினார்!

வட இந்திய இந்தி படங்களுக்கு இருந்த வசூலை முறியடித்து தென்னிந்தியாவை மிகப்பெரிய சினிமா சந்தையாக மாற்றிய பெருமையும் இப்படத்திற்கு சேரும் என்ற பெரும் புகழையும் இப்படம் ஏற்படுத்தலாம் என்ற எதிர் பார்ப்பு தமிழகத்தில் பரவலாக இருக்கின்றது.

பொதுவாக ஒரு படம் அதிக வசூல் எடுக்கும் என்று எதிர்பார்த்தால் சிறு சிறு கட்சிகளை தூண்டிவிட்டு, கலவரங்களை நடத்துவது ஒரு தமிழக தேசிய பழக்கம்.

தமிழ்நாட்டு அரசியல் சக்திகள் இடையே இந்த கேடு கெட்ட பழக்கம் இருப்பதாக ஒரு குறை இருக்கிறது !

ஆனால் இந்த திரைப்பட குழுவினரோ உடைக்க வேண்டிய தேங்காயை உடைத்து காரியத்தை கச்சிதமாக முடித்திருப்பதாக கூறப்படுகின்றது .

ஆகவே இந்த திரைப்படம் யாதொரு குழப்பங்களையும் சந்திக்காமல் வசூலில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது !

இந்த படம் வெற்றி பெறுமாக இருந்தால் அது ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்திற்கு மிகப்பெரிய உந்து கோலாக இருக்கும் என்பதை கூறவும் வேண்டுமோ ?

அலைகள் கூகுள் றோபோ
26.11.2018

Related posts