சிறீலங்கா அரசாங்கம் மாவீரர் நாளை நடத்த அனுமதி கிடையாது என்று எழுத்து மூலமான அறிவித்தலை வழங்கியிருந்த போதும் யாழ். பல்கலைக்கழகம் உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் மாவீரர்நாள் வழமை போலவே சிறப்புடன் நடை பெறுகிறது.
இப்போது யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
அதேவேளை கோப்பாயில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பதாக வடக்கு மகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று காலை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அப்பகுதியில் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறந்து கொண்டிருந்தன. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நேற்று விடுதலைப் புலிகள் தலைவர் பிறந்த நாளை கொண்டாட சென்ற எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு பின் விடுதலையானது தெரிந்ததே.
கிளிநொச்சி கனகபுரத்தில் மாவீரர்நாளுக்குரிய ஏற்பாடுகள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அதுபோல விசுமடுவில் முதற் பெண் கடற்புலி அங்கயற்கண்ணி அவர்களின் தாயார் பொதுச்சுடரினை ஏற்ற மாவீரர் நாள் நடைபெறவுள்ளது.
அலைகள் 27.11.2018