டென்மார்க்கில் அரசியல் தஞ்சம் கோரியவர்களில்..
01. தஞ்சம் நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தப்பட வேண்டியோர்…
02. துப்பாக்கி, கத்தி போன்றன தூக்கி சண்டைகளில் குதித்து சட்டத்தை மதியாது நடப்போர்…
03. ஆயுதப்போர்களில் குதித்தோர்..
04. போதை வஸ்த்து கடத்தல் போன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டடோர்..
என்னும் தரங்களை சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டால் இனி தலைநகர் பகுதியை அண்டியுள்ள லிண்ட்கொல்ம் என்ற தீவுக்கு இட்டுச் செல்லப்படுவர்.
இது சிறைச்சாலை படத்தில் வந்தது போல தப்பி ஓட வழியில்லாத ஒரு தீவு. இப்போது இங்கு வெறும் மூன்றே மூன்றுபேர் மட்டுமே வசிக்கிறார்கள்.
இந்தத் தீவு 12.000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. 7.000 ச.மீ பரப்பளவில் ஆய்வு கூடம் ஒன்று உண்டு.
1966ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த ஆய்வு கூடத்திற்கு நோயினால் பாதிக்கப்பட்ட மிருகங்கள் கொண்டு செல்லப்பட்டன. இப்போது இங்கிருக்கும் தொற்றுநோய் ஆபத்துக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு அகதிகள் அங்கு விடப்படுவார்கள்.
எதிர்வரும் 2021ம் ஆண்டு தீவு குற்றவாளிகளை ஏற்க தயாராகிவிடும். அரசின் புதிய வரவு செலவு திட்டத்தின் ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீவில் மொத்தம் 100 பேர்வரை தங்கவிடப்படலாம்.
இப்பகுதி நகர மேயர் எங்கோ உள்ள பிரச்சனையை தேவையில்லாமல் தமது நகரசபை பகுதிக்குள் தள்ளுவதாக கோபம் வெளியிட்டுள்ளார்.
முன்னர் ஐரோப்பாவிற்கு வெளியே ஒரு தீவில் இவர்களை தள்ளிவிட டென்மார்க் முயன்று, களைத்து இயலாமல் இப்போது ஒரு டென்மார்க் தீவிலாவது தள்ளிவிட நினைக்கிறது.
என்னவோ எங்கிருந்தாலும் தீவு தீவுதானே..
கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு
கொண்டாட கண்டு பிடித்து கொண்டா ஒரு தீவு..!
லீவு லீவு லீவு வேண்டும் தீவு தீவு தீவு..!
அலைகள் 30.11.2018