நில நடுக்கம், எரிமலை வெடிப்பு, பாறைத் தகடுகளின் மோதல்கள், முறிவுகள் ஏற்பட்டால் பூமிக்குள் இருந்து அதிர்வலைகள் கிளம்புவதுண்டு. அத்தகைய அதிர்வலைகள் எதிலுமே பொருந்தாத உலகம் இதுவரை அறிந்திராத புதுவகை அதிர்வலை ஒன்று இந்து சமுத்திர பிராந்தியத்தில் கடலடியில் இருந்து கிளம்பியிருக்கிறது.
நிலத்தடி அதிர்வலைகளை பதிவு செய்யும் சீசமோகிறாபர் என்ற கணிப்பு கருவிகள் இவை மிகவும் தாழ்ந்த அதிர்வலைகள் என்பதையே காட்டுகின்றன. உலகம் அறியாத புதுமையாக இருப்பதால் இந்த அதிர்வலைகளை விஞ்ஞானிகள் ஆச்சரியத்துடன் நோக்கியுள்ளனர்.
கடந்த 11ம் திகதி நவம்பர் காலை பிரான்சிற்கு சொந்தமான மயோற்றா தீவு இருக்குமிடத்தில் இருந்து மிகமிக ஆழத்தில் இருந்து அதிர்வலைகள் கிளம்பியுள்ளன. இந்தத் தீவு இந்து சமுத்திரத்தில் ஆபிரிக்காவிற்கு அருகில் உள்ள மடகாஸ்கரை அண்டி இருக்கிறது.
கடலின் அடி ஆழத்தில் இருந்து சுமார் 20 நிமிடங்கள் கொண்ட விட்டுவிட்டு நகர்ந்த லேசர் போன்ற அதிர்வுகளாக பரவியிருக்கிறது. இது எதற்காக ஏற்பட்டதென தெரியவில்லை. ஆனால் இதனால் ஒரு விளைவு மட்டும் ஏற்படுமாக இருந்தால் நிச்சயமாக மனித குலத்திடம் அதற்கான தீர்வுகள் இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
நில நடுக்கங்களை அளவிடும் ரிக்டர் அளவுக்குள் இது அடங்கவில்லை.
இங்கிலாந்தின் விஞ்ஞானிகளில் ஒருவரான ஸ்ரெபன் கிக்ஸ் கூறும்போது ஒலி நீண்டு சென்றதாகவும், மனிதர்களால் உணர முடியாததாக இருந்ததாகவும் தெரிவிக்கிறார்.
இது லோ பிறீகுவன்சி என்றும் சிறிய நீண்ட அலைகளாக கிறீன்ட்லாந்தில் செய்யப்பட்ட பதிவுகள் காட்டுகின்றன. பொதுவாக இப்பகுதி எரிமலைகள் கக்கும் பகுதிதான் ஆனால் அதற்கும் இப்போது வெளியாகியிருக்கும் ஒலிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. அது பெரியதாக இருக்கும், ஆனால் இதையோ அவதானிப்பது கடினமாக இருக்கிறது.
இந்த அதிர்வானது, நீண்ட அடிப்படையில் வரப்போகும் ஒரு நில நடுக்கமா.. இல்லை ஒரு துப்பாக்கியில் இருந்து வேட்டுக்கள் பறக்க முன் ஏற்பட்ட ரிகர் அழுத்தும் சத்தம் போன்றதா ஆபத்தா என்ற பீதி நிலவுகிறது.
அதேவேளை இது மனிதர்களால் வெளியிடப்பட்டதாகவும் இருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் ஆதாரங்கள் எவரிடமும் இல்லை. இதன் வரைபடங்கள் உலகின் பல பாகங்களில் இருந்தும் பதிவாகியிருக்கின்றன.
அலைகள் 03.12.2018 திங்கள்