தெற்கின் அரசியல் நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு முரணானது என வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பிரதமரை நியமிப்பது உட்பட்ட தெற்கின் அரசியலில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் தீர்வுகாண வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் மற்றும் அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த சிக்கல்களுக்கு தீர்வுகாண வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
—————-
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதமேந்தி போராடிய தமிழீழத்தை இன்று சுமந்திரன் ஒப்பந்தத்தில் பெற முயற்சிக்கின்றார்.
ஐக்கிய தேசிய கட்சி தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள நாட்டையே காட்டிக் கொடுக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார் .
தமிழ் தேசியகூட்டமைப்பினரும்,பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரனும் எதிர்பார்த்த விடுதலை புலிகளின் அமைப்பு தற்போது வடக்கில் உருவாகி வருகின்றது.
தேசிய அரசாங்கம் கடந்த மூன்று வருடகாலமாக நாட்டை பிரிக்கும் செயற்பாடுகளை மாத்திரமே முன்னெடுத்தது எனவும் தெரிவித்தார் .
பொதுஜன பெரமுனுவின் கட்சி அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
—————-
யாழில் வாள்வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம்..!
யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை, இலந்தைக்குளம் பகுதியில் இன்று (03) அதிகாலை வாள்வெட்டுக்குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அந்தப் பகுதியில் உள்ள வீடுகளின் கேற், வேலிகள் மற்றும் வீதியோரத்தில் இருந்த தண்ணீர்க் குழாய்கள், வீதித் திருத்தப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த தார் பரல்கள் போன்வற்றை வாள்வெட்டுக்குழு, வாளால் கொத்திச் சேதப்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
————