டென்மார்க்கில் உள்ள காள்ஸ்பியா நிறுவனம் பியர் உற்பத்தியில் உச்சக்கட்டம் அடையும் காலம் இது. நத்தார் கொண்டாட்டங்கள் களைகட்டும் டிசம்பர் என்றால் அது தப்பல்ல.
பரபரப்பாக உற்பத்தி நடைபெறும் காலத்தில் சில வேளைகளில் தொழிற்சாலைகளில் தவறுகளும் நடப்பது இயல்பானதே..
சிலர் காள்ஸ்பியா போத்தலை உடைத்து வாயில் ஊற்றிய பின்னர் நடத்தும் தப்புத்தாளங்களை இவர்கள் போத்தலில் அடைக்கும்போதே நடத்தியிருக்கிறார்கள் அவ்வளவுதான் வேறுபாடு.
முப்பது போத்தல்கள் கொண்ட பெட்டிகளில் அடுக்கி அனுப்பப்பட்ட பிளாஸ்டிக் கேஸ்கள் கொண்ட போத்தல்களிலேயே கண்ணாடித்துணிக்கைகள் கலந்துள்ளதாக அறிவித்துள்னர். அத்தோடு சிறிது குப்பைகளும் கடதாசித் துணிக்கைகளும் மிதக்கலாம்.
இந்த பெட்டிகள் நாடு முழுவதும் ஏறத்தாழ விற்பனையாகியிருக்கின்றன. ஆனால் எல்லாவற்றிலும் பாதிப்பு இல்லை, ஆனால் இதில்தான் தவறு இருக்கிறதென திட்டவட்டமாகக் கூற முடியாது. பாவிப்போரே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதற்கும் கண்டு பிடிக்க வசதியாக உற்பத்தி செய்த காலத்தை தந்துள்ளார்கள்.
இந்தப் போத்தல்கள் 5ம் திகதி அக்டோபர் முதல் 16ம் திகதி அக்டோபர் வரை விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றின் காலாவதியாகும் திகதி 12ம் திகதி யூலை 2019ம் ஆண்டாகும்.
அடடா இது போதுமே எச்சரிக்கையாக இருக்க..
கவனிக்காமல் குடித்தால் வாயில் காயம் ஏற்படலாம் எச்சரிக்கை..! இப்படி ஏதாவது தடயங்கள் துருதுருவென தெரிந்தால் வாங்கிய கடைகளில் திருப்பிக் கொடுத்து புதிதை பெறலாம் என்கிறார்கள்.
அலைகள் 04.12.2018