ரணில் விக்ரமசிங்க நாட்டின் பிரதமராவதற்கு பாராளுமன்றில் பெரும்பான்மை ஆதரவு உண்டு என்பதை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேணை ஒன்றை சஜித் பிரேமதாஸ முன்மொழியவுள்ளார்.
குறித்த நம்பிக்கை பிரேணையை எதிர் வரும் 12ஆம் திகதி சபையில் சஜித் பிரேமதாஸ சமர்ப்பிக்கவுள்ளார்.
குறித்த நம்பிக்கை பிரேணை எதிர் வரும் தினங்களில் பாராளுமன்ற செயலாளரிடம் கையளிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
————–
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு, ஐக்கிய தேசியக் கட்சி சட்டத்தின் உதவியைப் பெறச் சென்றாலும், நாட்டில் மக்களின் ஆதரவு மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கே உள்ளது என கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நீதிமன்றத்தின் தீர்ப்பு தற்காலிக தடையே தவிர, அமைச்சரவை அமைச்சர்களையோ பிரதமரையோ நீக்கும் செயலல்ல. அமைச்சுக்களின் அதிகாரிகள் குறிப்பிட்ட அமைச்சுக்களின் நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொண்டு வருகின்றனர்.
இப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு, பொதுத் தேர்தலே. ஐக்கிய தேசியக் கட்சி சட்டத்தின் ஆதரவைப் பெறச்சென்றாலும், மக்களின் ஒத்துழைப்பு மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அணியினருக்கே உள்ளது.
யார் என்ன சொன்னாலும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு முக்கிய தீர்வு, பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதேயாகும் என்றார்.
——————–
ராகமை பெரலந்த வீதியருகிலுள்ள ஏரிக்கருகில் வைத்து பிரபல போதைப்பொருள் வர்த்தகரான மஞ்சு, பாலியகொட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று பகல் கைதுசெய்யப்பட்டு நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது நீதவான் அவரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணைக்குட்படுத்தவும் உத்தரவிட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
படுவத்த ராகமையைச் சேர்ந்த 41 வயதுடைய பிரியந்த ஜயலால் எனப்படும் மஞ்சுவே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை கைதுசெய்யத வேளையில் அவரிடமிருந்து 109 கிராம் 94 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் பயன்படுத்தியதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளொன்றும் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்தே குறித்த சந்தேகநபரை இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதவான் அவரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணைக்குட்படுத்த உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
————–
ஜனாதிபதி அரசியலமைப்பிற்குட்பட்டும் தனக்குள்ள அதிகாரத்திற்குட்பட்டும் பாராளுமன்றினை கலைத்தார் ஆகையால் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்” என சட்டமா அதிபர் தனது வாதத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதியால் பாராளுமன்றம் கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி கலைக்கப்பட்டதாக வர்த்தமானி வெளியிடப்பட்டது. இதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் தற்போது உயர் நீதிமன்றின் அறை இலக்கம் 502இல் நடைபெற்றுக் கொண்டுள்ளது.
இம் மனு மீதான விசாரணையின் போதே சட்டமா அதிபர் மேற்கண்டவாறு தனது வாதத்தை முன் வைத்துள்ளார்.