2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய் இடம் பெற்று உள்ளார்.
இந்த ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலை டுவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.
அரசியல், திரைப்படங்கள், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் டுவிட்டர் தவிர்க்க முடியாத தளமாகி விட்டது. அந்த வகையில் 2018-ம் ஆண்டு அதிகம் பேசப்பட்ட பிரபலங்களின் பட்டியலை டுவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.
இதில் தமிழ் நடிகர்களில் இந்திய அளவில் நடிகர் விஜய் இடம் பெற்றுள்ளார். 10 பேர் கொண்ட பட்டியலில் விஜய்க்கு 8-ம் இடம் கிடைத்துள்ளது.
இந்தப் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து இரண்டாம் இடம் ராகுல் காந்திக்கு கிடைத்துள்ளது.
பட்டியலில் இடம் பெற்றுள்ள 10 பிரபலங்கள்:-
1. மோடி
2. ராகுல் காந்தி
3. அமித் ஷா
2. ராகுல் காந்தி
3. அமித் ஷா
4. யோகி ஆதித்யநாத்
5. அர்விந்த் கெஜ்ரிவால்
6. பவன் கல்யாண்
7. ஷாருக்கான்
8. விஜய்
9. மகேஷ் பாபு
10. சிவ்ராஜ் சிங் சவுகான்
2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் முதல் 10 ஹேஷ்டேக்கில் சர்க்கார் முதலிடத்தை பிடித்து உள்ளது. தென் இந்திய சினிமாக்கள் முதல் 10 இடங்களில் சர்கார், விஸ்வாசம், பரத் அண்டு நீனு, அரவிந்த்ஷா சமேதா ரங்கஸ்தலம், காலா , பிக்பாஸ் தெலுங்கு, விசுலு போடு ஆகிய 7 படங்கள் இடம் பெற்று உள்ளது.
மீ டூ உள்பட 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் சிறந்த 10 மிகவும் செல்வாக்கு தருணங்களாக டுவிட்டரில் வெளியிட்டு உள்ளது. அதில் சர்கார் முதலிடம் பிடித்து உள்ளது.